பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, பிரதமர் பங்கேற்பு

Update: 2021-01-21 11:14 GMT

தேஸ்பூர் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அசாம் மாநிலத்தில் உள்ள தேஸ்பூர் பல்கலைக்கழகத்தில் நாளை (22 ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும் 18வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், 2020ம் ஆண்டு படிப்பை முடித்த 1218 மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் வழங்கப்படும். இவர்களில் பல்வேறு பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்த 48 பேருக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News