பிப்ரவரி இறுதியில் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு ?

Update: 2021-01-20 12:22 GMT

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் பிப்ரவரி மாத இறுதியில் வெளியிட வாய்ப்புள்ளதாக என கேரள தலைமைத் தேர்தல் அலுவலர் டிக்காராம் மீனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் மீனா கூறியதாவது,ஏப்ரல் மத்தியில் தொடங்கி மே மாதம் வரை புனித ரம்ஜான் மாதம் நிகழவுள்ளதால் அதற்கு முன்பே தேர்தல் நடத்துவது உகந்ததாக இருக்கும். மேலும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளும் மே மாதம் 4-ம் தேதி தொடங்கவுள்ளதால், வாக்குப் பதிவு மையங்களாகப் பயன்படுத்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். கேரளா, தமிழகம், மேற்கு வங்காளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் பிப்ரவரி இறுதியில் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News