நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் பரக்ரம் திவாஸ் எனும் வலிமை தினமாக கொண்டாட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி கூறியதாவது: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 ம் தேதி இனி ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு அவரின் 125வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. கோல்கத்தாவில், முதலாவது வலிமை தின நிகழ்ச்சி நடைறெ உள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.நிகழ்ச்சியில், நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ படையில் பங்களிப்பு செய்த முக்கிய நபர்களை கவுரவிக்கும் பிரதமர் மோடி, கண்காட்சி ஒன்றையும் துவங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.