அனைத்துக் கட்சி கூட்டம்: பிரதமர் மோடி அழைப்பு
ஜன. 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.;
ஜன. 29-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் முதல்கட்டமாக 15-ம் தேதி வரையிலும், 2-ம் கட்டமாக மார்ச் 1-ம் தேதி வரையிலும் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது.