புதுவையில் அமைச்சர் கந்தசாமி தனது துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் தொகுதி திட்ட பணிகளை நிறைவேற்ற புதுவை ஆளுனர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். சட்டசபை முகப்பு மண்டபத்தில் கடந்த 10ம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கிய அவர், பொங்கல் பண்டிகையை கூட கொண்டாடாமல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தார். அமைச்சர் மல்லாடிக்கிருஷ்ணாராவ் மற்றும் கூட்டணி கட்சியினர் அமைச்சர் கந்தசாமியின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர், இந்தநிலையில் அமைச்சர் கந்தசாமி இன்று ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.