சபரிமலை கோவிலில் இன்று மகரவிளக்கு பூஜை

Update: 2021-01-14 06:11 GMT

பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை இன்று நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜைக்காக பந்தளத்தில் இருந்து கொண்டு வரப்படும், திருவாபரண பெட்டி மாலை 6.20 மணிக்கு சன்னிதானம் வந்து சேர உள்ளது.தொடர்ந்து, 6.30 மணிக்கு திருவாபரணங்கள் ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பல மேட்டில் 3 முறை, ஐயப்ப ஸ்வாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, மகரஜோதியைக் காண 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News