வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என பிரதமர் மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நேர்மையற்ற செயல்பாடுகளின் தளம் தான் அரசியல் என்ற பழைய கருத்து மாறி, இன்று நேர்மையானவர்களுக்கும் பொது சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது என்று இளைஞர்களுக்கு பிரதமர் உறுதி அளித்தார். நேர்மையும், செயல்பாடும்தான் இன்றைய தேவை.மேலும் வாரிசு அரசியலால் ஏற்படும் தீங்குகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
வாரிசு அரசியல் முறையை ஒழிக்க வேண்டும் என அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். நமது ஜனநாயகத்தை காக்க, நீங்கள் அரசியலில் சேர்வது அவசியம். சுவாமி விவேகானந்தர் உங்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். அவரது உத்வேகத்துடன், நமது இளைஞர்கள் அரசியலில் சேர்ந்தால், நாடு பலப்படும் என பிரதமர் கூறினார்.