முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீப் கான் காலமானார்

ஐதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீப் கான் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார்.;

Update: 2021-01-11 03:59 GMT

ஐதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீப் கான் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 83 .    50மற்றும்  60களில்மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக  திகழ்ந்தார். அவர் 6.7 அடி உயரம் என்பதால் அது அவரது வேகப்பந்து வீச்சு இந்திய அணிக்கு பெரிதும் உதவியது.

அப்போதைய காலக்கட்டங்களில் எதிரணியினருக்கு அவர் பெரும் மிரட்டலாக இருந்து வந்துள்ளார். குறிப்பாக மேற்குஇந்திய தீவுகள், இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடினார். அப்போது அவரது பந்து வீச்சு பெரிதும் பேசப்பட்டது.

மேலும் முன்னாள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், பிரசாத் உள்ளிட்டோருக்கு அவர் பயிற்சியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் முகமது ஹபீப் கான் உயிரிழந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளளது. பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News