டெல்லி விவசாயிகள் போராட்டம், மேலும் ஒருவர் தற்கொலை !

Update: 2021-01-10 06:23 GMT

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 47 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், வருகிற 15 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், சிங்கு எல்லையில் போராடி வந்த பஞ்சாப் மாநிலம் பதேகார்க் பகுதியைச் சேர்ந்த விவசாயி அமரீந்தர் சிங் (40) தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News