மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் காலமானார்
மலையாள திரைப்பட நடிகராகவும், திரைப்படப் பாடலாசிரியராகவும் விளங்கிய அனில் பனச்சூரன் நேற்று இரவு 8.10 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.;
மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் கொரோனா காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், சுவாச பிரச்னை இருந்த அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந் நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 8.10 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 55.
2007ம் ஆண்டில் வெளிவந்த அரபிக்கத என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார், அந்த படத்தில் அவர் எழுதிய பாடல்களால் பிரபலமானார்.
ஏராளமான கவிதைகளையும் பாடல்களையும் அவர் எழுதியுள்ளார். காடு என்ற திரைப்படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருந்தார், இந்நிலையில் அவரது மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரமுகர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.