கொரோனா தடுப்பு மருந்து குறித்து சிலரால் பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை இன்று நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகையை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கு ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டு பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம். கொரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.