பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் எவ்வாறு அப்புறப்படுத்துகிறார்கள் என்பதில் மாற்றங்களைக் கொண்டுவர மிகப்பெரிய ஊடக பிரச்சாரம் தேவை என்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
விஜயவாடாவில் உள்ள மத்திய பெட்ரோரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே உரையாற்றிய வெங்கையா நாயுடு, பிளாஸ்டிக் பிரச்சனை இல்லை என்றும் அதை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் பிரச்சனை உள்ளது . பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அதன் நீண்ட ஆயுளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சவால் குறித்து எடுத்துரைத்தார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தனிநபர் பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றின் தயாரிப்பில் ஞெகிழி ஆற்றி வரும் பங்கை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்கள் பங்கு அவசியம் என்று அவர் கூறினார்.