கல், கான்கிரீட் கட்டமைப்பு அல்ல நடுத்தர வர்க்கத்தின் ஆசை நிறைவேற்றம் : பிரதமர் மோடி

கல், கான்கிரீட் மற்றும் இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட உள்கட்டமைப்பு மட்டுமல்ல, நாட்டின் குடிமக்கள், நாட்டின் நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சான்றுகள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.;

Update: 2020-12-28 06:36 GMT

டெல்லி மெட்ரோவின் மெஜந்தா பாதையில் இந்தியாவின் முதல் டிரைவர் இல்லாத ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவின் முதல் டிரைவர் இல்லாத ரயிலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அவர் பேசும் போது, இது செங்கல் மற்றும் கல், கான்கிரீட் மற்றும் இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட உள்கட்டமைப்பு மட்டுமல்ல, நாட்டின் குடிமக்கள், நாட்டின் நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சான்றுகள் என்று அவர் மேலும் கூறினார்.

எங்கள் அரசாங்கம் மெட்ரோ கொள்கையை வகுத்து, அதை ஒரு முழு வீச்சில் செயல்படுத்தியது. உள்ளூர் தேவைக்கேற்ப பணியாற்ற நாங்கள் வலியுறுத்தினோம், உள்ளூர் தரங்களை மேம்படுத்துதல், மேக் இன் இந்தியா விரிவாக்கம், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றை நாங்கள் வலியுறுத்தினோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.இந் நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News