இந்தியாவில் சிறுத்தைப் புலிகள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு

Update: 2020-12-28 06:22 GMT

மாதிரி படம்

இந்தியாவில் சிறுத்தைப் புலிகள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்திருப்பது மத்திய அரசின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த 2014-ஆம் ஆண்டு 8,000-ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை, இப்போது 12,852 என்ற அளவில் உயா்ந்துள்ளது.

இந்தியாவில் 2018-ஆம் ஆண்டு சிறுத்தைப் புலிகளின் நிலை என்ற தலைப்பிலான இந்த கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெளியிட்டாா்.இந்த நிகழ்ச்சிக்குப் பின்னா் தனது ட்விட்டர் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;இந்தியாவில் சிறுத்தைப் புலி எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பைக் காட்டிலும் 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்திருக்கிறது.

மாநிலங்களைப் பொருத்தவரை 3,421 சிறுத்தைப் புலிகளுடன் மத்திய பிரதேசம் முதலிடத்திலும், கா்நாடகம் (1,783), மகாராஷ்டிரம் (1,690) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக புலி, சிங்கம், சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வன உயிரினம் மற்றும் பல்லுயிா் பெருக்கத்துக்கு சான்றாக அமைந்துள்ளது என்று ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News