இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது : சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதலே உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகெங்கிலும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியாவும் கொரோனா வைரசை தடுக்க கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில்,கடந்த 24 மணி நேரத்தில் 19,556 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் மொத்தம் 2,92,518 பேர் மட்டுமே கொரோனாவினால் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 96,36,487 ஆக உயர்ந்துள்ளது.