சுய சார்பு இந்தியா - தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
இன்று இந்திய தொழில் வர்த்தக சபை அசோசம் அறக்கட்டளை நிறுவனம் நடத்திய விழாவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் பங்கேற்றார். அதில் சுய சார்பு இந்தியா திட்டத்தில் முழு அளவிலான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று இந்திய தொழில் வர்த்தக சபை அசோசம் அறக்கட்டளை நிறுவனம் நடத்திய விழாவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது,
நாட்டின் வளர்ச்சிக்கும் தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி தற்போது மின்னணு உள்கட்டமைப்பில் தான் கவனம் செலுத்தி வருவதாக கூறினார். 2047 ஆம் ஆண்டில் நாட்டின் முதலாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கடந்த 27 ஆண்டுகளில் தங்களது முழு வளர்ச்சியை எட்ட வேண்டும். இந்தியர்களின் தன்னம்பிக்கை காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.
உற்பத்தியில் நான்காவது புரட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அதற்கு தகுந்தாற் போல தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். மேலும் அந்த வகையில் நமது நாடும் உத்வேகத்துடன் முன்னோக்கி சென்று கொண்டுள்ளது.
உற்பத்தியின் பயன்கள் நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதை பெருநிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும், இந்திய பொருளாதாரத்தின் மீது உலக நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளது,
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும், முதலீட்டை அதிகரிக்க வேண்டும். தொழில் துறை முன்னேற்றத்திற்காக மிகப் பழமையான ஆயிரத்து 500 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
கடந்த 200 ஆண்டுகளில் இந்தியாவில் சிறந்த தொழில் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் குழுமத்திற்கும் விருது வழங்கப்பட்டது, நூற்றாண்டின் சிறந்த தொழில் முனைவோர் விருதை டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவிடம் பிரதமர் நரேந்திர மோதி வழங்கினார்.