நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம்: நிதின்கட்கரி
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹுனார் ஹாட் - ஐ மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.பின்னர் பேசிய நிதின் கட்கரி, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம் என்றும், வறுமையை ஒழிப்பது மோடி அரசின் முன்னுரிமை என்றும் கூறினார்.நமது நாட்டின் கிராமங்களில் உள்ள திறன் மிக்க கைவினைக் கலைஞர்களுக்கு சிறப்பான தளத்தை ஹுனார் ஹாட் வழங்குகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் பொருள்கள் சர்வதேச சந்தைகளை சென்றடையும் போது, நமது கலைஞர்கள் வளம் பெறுகிறார்கள், என்று அவர் குறிப்பிட்டார்.மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் வினய்குமார் சக்சேனா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.