உக்ரைனில் இறந்த கர்நாடகா மாணவர் உடலை கொண்டு வருவதில் சிக்கல்

போர் நடந்து வருவதால் மாணவர் உடலை கொண்டு வருவது சிரமம் என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்;

Update: 2022-03-01 14:00 GMT

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன் சேகரப்பா. இவர் உக்ரைனில் படித்து வந்தார். ரஷ்யா ஊக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் கார்கீவ் நகரில் உள்ளவர்கள் வெளியே வர முடியாமல் திணறி வருகின்றனர். இதேபோல் இன்று மாணவர் நவீன் சேகரப்பா 2வது பெரிய நகரமான கார்கிவ் நகர் ரயில் நிலையம் செல்ல முயன்றார். அப்போது ரஷ்ய ராணுவத்தின் குண்டு வீச்சு தாக்குதலில் பலர் உயரிழந்தனர். இதில் நவீன் சேகரப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் போர் நடைபெறுவதால் உயிரிழந்த நவீன் உடலை உடனே எடுத்து வருவது சற்று சிரமம் என்றும், தகுந்த சூழல் வரும்போது நிச்சயம் உயிரிழந்த மாணவனின் உடலை பத்திரப்படுத்தி இந்தியாவிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் நவீனின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News