முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து வந்த போலீசார்
Police brought former minister Manikandan to Madurai;
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடிகை ஒருவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தற்போத அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது போலீசார் சார்பில் மணிகண்டனை மதுரை அழைத்து சென்று விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மணிகண்டன் தரப்பு வழக்கறிஞர் அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்ட நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மணிகண்டனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும் மணிகண்டனை மதுரை அழைத்து சென்று விசாரணை நடத்தவும் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் நள்ளிரவு மதுரைக்கு அழைத்து வந்து மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் தங்க வைத்திருந்தனர். தொடர்ந்து அங்கிருந்து அண்ணாநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு விசாரணை நடத்த அழைத்துச் சென்றுவிசாரணை நடைபெற்று வருகிறது..
இதனை தொடர்ந்து மணிகண்டனின் ஜாமீன் மனுவை ஜூலை 5 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.