திரைக்கு வரும் ட்ரிப்
டென்னிஸ் மஞ்சுநாத் டைரக்ஷனில் உருவாகி இருக்கும் படம் ட்ரிப், பிப்ரவரி 5-ந் தேதி ரிலீசாக உள்ளது.;
அறிமுக நாயகன் பிரவீன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் மெயின் ரோலில் நடித்துள்ளனர்.
சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்பட அனுபவம் குறிச்சு ஹீரோ பிரவீன் "3 வருசங்களுக்கு முன் ஒரு உதவி இயக்குனர் மூலமாகத் தான் எனக்கு ட்ரிப் பட வாய்ப்பு கிடைத்தது. திரிஷா, நயன்தாரா, சமந்தா தவிர எல்லா ஹீரோயின்களிடமும் கதை சொல்லிட்டோம். யாருமே நடிக்க சம்மதிக்கல. சில பேரு அய்யே.. புது ஹீரோ கூட எல்லாம் நடிக்க மாட்டேன் என சொல்லி நடிக்க மறுத்துட்டாங்க. அந்த சமயத்தில் கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப் போனதால் நடிகை சுனைனா நடிக்க ஒத்துக்கொண்டார். எனது முதல் படத்தில் சுனைனா ஹீரோயினாக நடித்ததை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்" என பிரவீன் சொன்னார்.
-மைக்கேல்ராஜ்.