பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினிஅஜித் வருவாரா?
அல்டிமேட் ஸ்டார் அஜித் வீட்டம்மா ஷாலினி அஜித் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய காட்சியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது உண்மையல்ல என்று அதிகாரப்பூர்வமாக சேதி வந்துள்ளது.;
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி, 'காதலுக்கு மரியாதை' படத்தில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்து. தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்த இவர், 2000ம் ஆண்டில் மாதவன் நடித்த 'அலைபாயுதே' படத்தில் மணி ரத்னத்துடன் இணைந்தார். இந்த திரைப்படம் தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் நினைவில் உள்ளது.. அதே சமயம் ஆக்டர் அஜித் உடனான மேரேஜ் நடந்ததால் 2001ல் நடிப்பிலிருந்து விலகினார். அவரது கடைசி படம் பிரசாந்த் நடித்த 'பிரியாத வரம் வேண்டும்' திரைப்படமாகும்.
இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு அடியெடுத்து வைக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த தகவல் உண்மையா? என்று அஜித் தரப்பில் கேட்ட போது அப்படி ஒரு பேச்சுக்கே இடமில்லை என்று சேதி வந்துருக்கு.
நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ரஹ்மான், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் ஏற்கனவே படப்பிடிப்பில் பிசியாக உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு நடன இயக்குனராக பிருந்தா பணியாற்றி வருகிறார். ஷாம் கவுசல் ஆக்சன் காட்சிகளை இயக்கி வருகிறார். இந்த படத்தை மணி ரத்னம் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டிங் வேலைகளுக்கு ஸ்ரீகர் பிரசாத் , தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பை கவனித்து வருகிறார். ஜெயமோகன் வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மைக்கேல்ராஜ்