நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள்

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பயணத்தை ஆரம்பித்தவர், எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், தன்னம்பிக்கையாலும், திறமையாலும் தமிழ்த் திரைப்படங்களில் தடம் பதித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்.;

Update: 2021-02-17 02:41 GMT

சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பிப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த


திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார். இவர் விளம்பர நிறுவனத்திற்காக மூன்று நாட்கள் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

பின்பு இவர் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே போன்ற படங்களில் நடித்தார். தற்போது காக்கிச்சட்டை, ரஜினி முருகன் ஆகிய படங்களுக்கு பிறகு, சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் ரெமோ படத்தில் நடித்தார். அத்திரைப்படம் விமர்சனங்களுக்கு மத்தியில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Tags:    

Similar News