விரைவில் திரைக்கு வரும் இது விபத்து பகுதி
ரேகா மூவீஸ் புரொடக்ஷன்ஸின் மூன்றாவது தயாரிப்பாக வெளிவரவிருக்கும் ஹாரர் திரில்லர் "இது விபத்து பகுதி" படம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் மிரட்ட வருகிறது!;
எம். சக்ரவர்த்தி தயாரிப்பில் ரேகா மூவிஸ் வழங்கும் "இது விபத்து" பகுதி " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள். வெளியாகியுள்ளது. கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு ஆகியவற்றை விஜய் திருமூலம் கையாண்டுள்ளார். கை தென்னவன், சசி, அனு கிருஷ்ணா, டிட்டோ ஷார்மின் ஆகியோர் நடித்துள்ளனர். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன், ஆகியோர் இசையமைத்துள்ளனர். எடிட்டிங் பணிகளை ஆண்டோ ராயன், ஸ்டன்ட் மின்னல் முருகன், நடனம் ஜோ மதி மற்றும் கலை சுந்தர் ராஜன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் சஸ்பென்ஸ், ஹாரர்திரில்லர் படமாக இருப்பதால் படம் விறுவிறுப்பான கதைகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 12 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெரும் என நம்பப்படுகிறது.
-மைக்கேல்ராஜ்