குமாரபாளையம் JKKN மருந்தியல் கல்லூரியில் உலக சுகாதார தினம் அனுசரிப்பு

குமாரபாளையம் JKKN மருந்தியல் கல்லூரியில் 'உலக சுகாதார தின'த்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Update: 2022-04-13 09:18 GMT

உலக சுகாதார தின அனுசரிப்பில்  JKKN  மருந்தியல் கல்லூரியில் நடந்த மரக்கன்று நாடும் நிகழ்வு.                   

1948ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையிலும், உடல்நலம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2022ம் ஆண்டின், உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் 'நமது பூமி, நமது ஆரோக்கியம்'. அதையொட்டி மருந்தியல் பயிற்சித் துறை, JKKN மருந்தியல் கல்லூரி, கல்லூரியின் Innovation Cell ஆகியவை இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மருந்தியல் கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் மருந்தியல்துறை ஸ்டாஃப்.

அன்றையதினம் JKKN மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடந்த காலை அமர்வில் கல்லூரியின் முதல்வர் டாக்டர். சம்பத்குமார் தலைமையில் மரக்கன்றுகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து 'நெருப்பில்லாமல் சமையல்' போட்டி நடத்தப்பட்டது. நெருப்பின்றி சமைக்கப்படும் உணவில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு, அதன் ஆரோக்கியம் மற்றும் அதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நெருப்பில்லாத சமையல் போட்டி நடத்தப்பட்டது. ஜங்க் உணவுகளை உண்ணக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்கள் போஸ்டர்கள் வைத்திருந்தனர்.

பிற்பகல் அமர்வில், "உலக சுகாதார தினம்" என்ற தலைப்பில், நிவேதா மற்றும் கீர்த்திகா ஆகியோரால் விளக்கக்காட்சியும், "வாழ்க்கை மாற்றம்" என்ற தலைப்பில் வினோலாஷ்ரிம்மிஷ்மா மற்றும் கோஷிகா ஆகியோரின் விளக்கக்காட்சியும் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து இணைப் பேராசிரியர் டாக்டர்.காமேஸ்வரன், ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனில்  "ஸ்டார்ட் அப்" மற்றும் ஹெல்த்கேர் ஃபிட்னஸ்  பயன்பாடுகள் குறித்த வீடியோ காட்சியை விளக்கங்களுடன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

Tags:    

Similar News