என்ன படிக்கலாம்? வாங்க பார்க்கலாம்..!
பிளஸ் 2 முடித்த பின்னர் என்ன படிக்கலாம் என்பதற்கு இன்ஸ்டாநியூஸ் வழி காட்டுகிறது.;
பிளஸ் 2 முடிச்சாச்சு. அடுத்து என்ன பண்ணலாம்ணு, கன்னத்தில ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டு ஆழமாக யோசிக்கத் தேவையில்லை. உங்கள் முடிவே இறுதியானது, உறுதியானதும்.
அதற்கு உங்களுக்கு வழிகாட்ட வருகிறது Instanews செய்தி தளம்
என்ன செய்யலாம்..? சில டிப்ஸ்கள்
1. சரியான முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது.
2. எக்கச்சக்க விருப்பங்கள் மனதில் தோன்றி குழப்பங்களை ஏற்படுத்தி தளர்வுற்று போகவேண்டாம்.
3. குழப்பங்களின் முட்களை வெட்டி எறிய முதலில் உங்களது ஆர்வம், பொழுதுபோக்கு, நாட்டம், உங்களுக்கான ஆற்றல் மற்றும் வாய்ப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
4. உங்கள் ஆர்வத்தின் பேரில் தேர்வு செய்யும் படிப்பில் வெற்றியின் சதவீதம் அதிகமாவதுடன்,அதில் திருப்தி மனப்பான்மை ஏற்படும். அதுவே பல வெற்றிகளுக்கு அடிப்படையாக அமையும்.
5. பெற்றோர் மற்றும் நண்பர்களின் விருப்பங்களை ஏற்காதீர்கள்.
6. உங்களுக்கான ஆற்றலும், நாட்டமும் அதிகம் உள்ள பிரிவுகளை தேர்வு செய்யுங்கள்.
உங்களை நீங்களே எப்படி அடையாளம் காணலாம்? ஒரு மதிப்பீடு..
அ. எப்பிரிவின் மீது ஆர்வம் (Area of interest)
ஆ. ஆளுமை ( Personality)
இ. தன்மை ( Aptitude)
ஈ. உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்யுங்கள். (Assess your Strength and Weakness)
உ. திறமைகள் (Skills)
ஊ. சாத்தியங்கள் மற்றும் வாய்ப்புகள் (Possiibility and Opportunity)
எ. திறன் (Capability)
ஏ. சாத்தியக்கூறு மற்றும் வழிகாட்டல் (Feasibility and and Guidance)
ஐ. வேலையின் தன்மை ( Nature of Work)
ஒ. நிதியுதவி மற்றும் ஸ்காலர்ஷிப் (Financial aid and Scholarship)
இவைகளை பகுப்பாய்வு செய்ய, நல்ல வழிகாட்டி ஆசிரியர்களிடம் உங்கள் விருப்பம், நோக்கங்களை கூறி தெளிவு பெறலாம்.
(இன்னும் வரும்..உங்களுடனான உறவுகள் தொடரும்..)
நாளை முதல் அடிப்படை பட்ட படிப்புகள். ( Basic Degrees) திறன்களின் அடிப்படையில்.