JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் JKK நடராஜா வித்யாலயா பள்ளிகளில் வித்யாரம்பம்

JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் JKK நடராஜா வித்யாலயா பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-10-06 11:54 GMT

வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தையின் கையைப்பிடித்து எழுத வைக்கும் JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.

குமாரபாளையம், JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் JKK நடராஜா வித்யாலயா பள்ளிகளில் கல்விக்கரசி கலைமகளை வணங்கும் திருநாளாம் சரஸ்வதி பூஜை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

இந் நன்னாளில் மழலையரின் கல்வித் துவக்கமான "வித்யாரம்பம் நிகழ்ச்சியில்" JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை ஒரு தட்டில் பரப்பி வைக்கப்பட்ட நெல்மணிகளில்  ஒவ்வொரு குழந்தையின் கையைப்பிடித்து 'அ' என்று எழுதக் கற்றுக் கொடுத்து அவர்களின் கல்விப்பயணத்தைத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது இயக்குனர் ஓம்சரவணா, மற்றும் திருமதி ஐஸ்வர்யலக்ஷ்மி ஓம்சரவணா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர். தங்கள் குழந்தைகளின் கல்வித்துவக்க நிகழ்வைக் கண்ட பெற்றோர்கள் அகமகிழ்ந்தனர்.


தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் விஜயதசமி விழா கொண்டாடப்படுகின்றது. இந்து நாள்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலைக் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடனப்  பயிற்சி, பிறமொழிப் பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான நவமியில் சரஸ்வதியை வணங்கி கல்வி, கலை கருவிகளுக்கு பூசை நடத்தி தசமி அன்று ஆயுதபூஜை  என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூஜை நடத்துகின்றனர்.

Tags:    

Similar News