விடு..விடு..விடுகதை சொல்லப்போறோம்..வாங்க..வாங்க..!

கிராமங்களின் சிறந்த அறிவு ரீதியான பொழுதுபோக்கு விடுகதைகள்தான். கண்டுபிடிக்க முடியாத விடுகதைகளி உருவாக்கி கேட்பவர்களை விழிக்கச் செய்வதில் ஒரு கில்லாடித்தனம் இருக்கும்.

Update: 2024-04-07 08:19 GMT

vidukathai in tamil with answer-விடுகதைகள் (கோப்பு படம்)

Vidukathai in Tamil With Answer

விடுகதை என்பது ஒரு பதிலுக்கான விடையை நேரடியாக கூறாமல் மறைபொருளாக கூறி அதில் ஒளிந்திருக்கும் மறைபொருளை கண்டுபிடிப்பதே ஆகும். கதைக்குள் ஒளிந்திருக்கும் விடையை விடுவிப்பது விடு கதை எனப்படுகிறது.

பல விடுகதைகள் செவி வழியாக நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றைய தலைமுறை பிள்ளைகள் வரை வந்தடைந்துள்ளது.விடுகதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை பொருளின் விடையை கண்டுபிடிக்க மனதை ஒருநிலைப்படுத்தி சிந்திக்கச் செய்கிறது.

Vidukathai in Tamil With Answer

கிராமங்களில் விடுகதை என்பது மிகச் சிறந்த ஒரு பொழுது போக்காக இருந்த காலங்களும் உள்ளன. . பிறர் சிறப்பாக சிந்திக்கும் வகையில் ஒரு விடுகதை கூறி அதன் விடையை பிறர் கண்டுபிடிக்க இயலாத பட்சத்தில் அந்த விடுகதையின் விடையை நாம் கூறுவது என்பது அறிவு சார்ந்த ஒரு தனிப் பெருமை தான்.

தமிழ் விடுகதைகள் பல, காலம் காலமாக நம்மிடையே வழக்கத்தில் இருந்தாலும் புதியதாக பல விடுகதைகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் சிறப்பான பல தமிழ் விடுகதைகள் விடையுடன் பார்க்கலாம் வாங்க.

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? தேள்

பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? தலைமுடி

உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்? வெங்காயம்

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு

மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? விழுது

Vidukathai in Tamil With Answer

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? பட்டாசு

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? மூச்சு

கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? பூரி

கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்? காகம்

பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்? வெண்டைக்காய்

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன? கண்

ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன? ஆமை

வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்? முட்டை

Vidukathai in Tamil With Answer

எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ? அடுப்புக்கரி

உங்களுக்கு சொந்தமான ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்? பெயர்

யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன? இமை

வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? சிரிப்பு

வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன? நாய்

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? வாழை

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? சோளம்

Vidukathai in Tamil With Answer

வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் – அது என்ன?

கனவு

மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் - அது என்ன?

- [நத்தை]

மூன்றுகால் குள்ள அக்கா, பாரம் தாங்கி, நெருப்பை சுமந்து சோறு சமைப்பாள் – அவள் யார்?

- [அடுப்பு]

பட்டனைத் தட்டினால் சட்டென விரியும் - அது என்ன?

- [குடை]

நீரிலும், நிலத்திலும் வாழ்வான், பாறைக்குள்ளும் பதுங்கி வாழ்வான் – அவன் யார்?

- [தவளை]

Vidukathai in Tamil With Answer

கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் – அவன் யார்?

- [பூட்டு]

மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன் – அது என்ன?

- [மழை]

முற்றத்தில் நடக்கும் மூலையில் படுப்பான் – அவன் யார்?

[துடைப்பம்]

முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான் – யார் அவன்?

– [கதவு]

. மேல் பலகை, கீழ் பலகை நடுவில் நெளி பாம்பு – அது என்ன?

- [நாக்கு]

. மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?

- [வேர்க்கடலை]

. இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரமல்ல – அது என்ன?

- [மின்மினிப் பூச்சி]

. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?

- [பம்பரம்]

. வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?

- [வாழைப்பழம்]

. ஒட்டியிருக்கிறார்கள் எதிராளிகள், அவர்கள் ஒன்று சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கிறார்கள் – அது என்ன?

- [கத்தரிக்கோல்]

Vidukathai in Tamil With Answer

ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்?

- [நிழல்]

உணவை கையில் எடுப்பான் ஆனால் உண்ண மாட்டான் – அவன் யார்?

- [அகப்பை]

அரங்கினில் ஆடாதவள், கிளைகளில் அரங்கேற்றம் நடத்துவாள் – அவள் யார்?

- [தென்றல்]

தொடப் பார்த்தேன் எட்டிச் சென்றது, பறந்து பார்த்தேன் விரிந்து சென்றது – அது என்ன?

- [வானம்]

உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே உற்சாக பானம் – அது என்ன?

- [தண்ணீர்]

கீறினால் சோறுதரும், நீர் ஊற்றினால் சேறு வரும் – அது என்ன?

- [நிலம்]

விரிந்த வயல் வெளியில் வதைத்த நெல் மணிகள் – அது என்ன?

- [நட்சத்திரம்]

Vidukathai in Tamil With Answer

மூலையில் முடங்கிக் கிடப்பான், மூலைமுடுக்கெல்லாம் சுத்தம் செய்வான் –அவன் யார்?

- [துடைப்பம்]

இனிப்புப் பொட்டலத்துக்கு இரண்டாயிரம் பேர் காவல் – அது என்ன?

- [தேன்கூடு]

கையில்லாமல் நீந்தி, கடல் கடப்பான் – அவன் யார்?

- [கப்பல்]

எண்ணத்தை விதைத்து, வண்ணமாய் அறுவடை செய்வது – அது என்ன?

- [ஓவியம்]

அவனுக்கு காவலுக்கு ஒரு வீடு, வாழ்வதற்கு ஒரு வீடு – அவன் யார்?

- [ஆமை]

ஆரவாரம் இல்லாமல் அணிவகுப்பு, ஓயாது அவர்கள் உழைப்பு – யார் அவர்கள்?

- [எறும்புக் கூட்டம்]

கோழிபோல் உருவம், குதிரைபோல் ஓட்டம் – அது என்ன?

- [நெருப்புக் கோழி]

உயரப் பறக்கும், ஆனால் ஊரைச் சுற்றிக் கொண்டு பறக்காது – அது என்ன?

- [கொடி]

கண்ணே இல்லாதவன், கண் இழந்தோருக்கு வழிகாட்டுவான் – அவன் யார்?

- [கைத்தடி]

Vidukathai in Tamil With Answer

உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் – அவன் யார்?

- [தண்டோரா]

கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்?

- [உளுத்தம் பருப்பு]

உருவம் இல்லாத ஒருவன், உலகெங்கும் உலவித் திரிவான் – அவன் யார்?

- [காற்று]

அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?

- [பந்து]

நனைந்தாலும் நடுங்கமாட்டான் – அவன் யார்?

- [குடை]

அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான் – அவன் யார்?

- [புகை]

வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் – அவன் யார்?

- [மோதிரம்]

எட்டுக்கால் ஊன்றி இடமும், வலமுமாக வருவான் – அவன் யார்?

- [நண்டு]

Vidukathai in Tamil With Answer

. ஓடையில் நிற்கும் ஒற்றைக்காலனுக்கு ஒரே குறி உணவு – அவன் யார்?

- [கொக்கு]

ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம் - அது என்ன?

- [ஆலமரம்]

முரட்டு மனிதனுக்கு முப்பத்திரண்டு பேர் காவல் - அது என்ன?

- [நாக்கு]

நடந்தால் நடக்கும், நின்றால் நிற்கும் - அது என்ன?

- [நிழல்]

உயிரற்ற பறவை, ஊர் ஊராய் பறக்கும் - அது என்ன?

- [விமானம்]

விறகெரியத் துணையாகும், விளக்கெரியப் பகையாகும் - அது என்ன?

- [காற்று]

நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது - அது என்ன?

- [புகைப்படம்]

Vidukathai in Tamil With Answer

தலையில் வைக்க முடியாத பூ, சமையலுக்கு உதவும் பூ - அது என்ன?

- [வாழைப்பூ]

தோகைபோல உடம்புக் காரி, துப்புரவு தொழிலுக்கு கெட்டிக்காரி - அவள் யார்?

- [துடைப்பம்]

ஆயிரம் அறைகள் அரண்மனையில், ராணியின் ஆட்சி - அது என்ன?

- [தேன்கூடு]

நூல் நூற்கும் ராட்டை அல்ல, வலை பின்னும் மீன் பிடிக்க அல்ல - அது என்ன?

- [சிலந்திப் பூச்சி]

நோயின்றி நாளும் மெலிவாள், கோள் சொல்லி நாளும் கழிவாள் - அவள் யார்?

- [நாட்காட்டியின் தாள்]

மழைக்காலம் வந்தாலே மகராசி சங்கீதம் தான் - அவள் யார்?

- [தவளை]

அரைசாண் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை - அவன் யார்?

- [வெண்டைக்காய்]

Vidukathai in Tamil With Answer

சிவப்பு பைக்குள் சில்லறைகள் - அது என்ன?

- [மிளகாய்]

உலகமெங்கும் சுற்றும் அவனை ஒருவரும் கண்டதில்லை - அவன் யார்?

- [காற்று]

அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?

- [கண்கள்]

வந்தால் கொடுக்கும், வராவிட்டால் கெடுக்கும் - அது என்ன?

-[மழை]

வயிறு முட்ட சாப்பிட்டால்தான் நிமிர்ந்து நிற்பான் - அவன் யார்?

- [பலூன்]

உழைக்க உழைக்க உடலெல்லாம் தோன்றும் - அது என்ன?

- [வியர்வை]

. வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி - அது என்ன?

- [விளக்குத் திரி]

Vidukathai in Tamil With Answer

பந்தலைச் சுற்றி பாம்பு தொங்குது - அது என்ன?

- [புடலங்காய்]

ஊளையிட்டுக் கொண்டே ஊரைச் சுமக்கும் - அது என்ன?

- [புகைவண்டி]

கடல் நீரில் மறைந்திருக்கும் கல் - அது என்ன கல்?

- [உப்புக்கல்]

நிறைவேறாத ஆசைகளை நித்திரையில் பெறலாம் - அது என்ன?

- [கனவு]

கையால் இழுத்தால் அசையும் நாக்கு, கணீரென்று அனைவரையும் அழைக்கும் - அது என்ன?

- [மணியோசை]

பூட்டு இல்லாத பெட்டியை திறக்கலாம், ஆனால் மீண்டும் பூட்ட முடியாது - அது என்ன?

- [தேங்காய்]


தேவை என்றால் வீசுவார்கள், தேலையில்லை என்றால் எடுத்து வைப்பார்கள் - அது என்ன?

- [நங்கூரம்]

. ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் - அது என்ன?

- [கத்தரிக்கோல்]

எட்டித் தொட நினைத்தேன், இடறி விழுந்தேன், குதித்து தொட நினைத்தேன் குட்டிக் கரணம் போட்டேன் - அது என்ன?

- [வானம்]

Vidukathai in Tamil With Answer

பழகினால் மறக்காதவன், பயம் அறியாதவன் - அவன் யார்?

- [நாய்]

காலையில் உறவாடி வருவான், மாலையில் பறந்தோடிப் போவான் - அவன் யார்?

- [சூரியன்]

நித்திரையின் தூதுவன், நினையாமல் வருவான் - அவன் யார்?

- [கொட்டாவி]

. உடல் இல்லாதவன் ஊரெல்லாம் பவனி வருவான் - அவன் யார்?

- [காற்று]

வெளியே வெள்ளி, உள்ளே தங்கம் - அது என்ன?

- [முட்டை]

பகலில் எரியா விளக்கு, இரவில் அணையா விளக்கு - அது என்ன?

- [நிலா]

தங்கை தீட்டிய ஓவியம் தரையில் தவழ்கிறது - அது என்ன?

- [கோலம்]

Vidukathai in Tamil With Answer

அனைவரையும் ஆட்டிப் படைக்கும், ஆதவன் வந்தால் ஓடிப்போகும் - அது என்ன?

- [குளிர்]

வாணலியில் விரியும் வட்ட வட்ட இலை - அது என்ன?

- [அப்பளம்]

உச்சியின் ஊடே சிக்கல் தீர்ப்பான், சிக்கிக் கொண்டால் பல்லை இழப்பான் - அவன் யார்?

- [சீப்பு]

கொடுக்கு இரண்டு இருந்தாலும், அவனுக்கு வாலில்தான் விஷம் - அவன் யார்?

- [தேள்]

உறையில் உறங்குவான், உயிரைப் பறிப்பான் - அது என்ன?

- [வாள்]

ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது - அவர்கள் யார்?

- [எறும்புக்கூட்டம்]

Vidukathai in Tamil With Answer

எரித்தால் சிவப்பு அணைந்தால் கறுப்பு - அது என்ன?

- [கரித்துண்டு]

கரித்துண்டு நான், கடினத்திற்கு நான், காண்போரைக் கவருவேன் - நான் யார்?

- [வைரம்]

இரண்டு பெண்கள், இரட்டைப் பிறவிகள் ஒருத்தி கீழே வந்தால் ஒருத்தி மேலே போவாள் - அவர்கள் யார்?

- [தராசுத் தட்டுகள்]

அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும் - அது என்ன?

- [கரும்பு]

பாறைமேல் இட்டவிதை பார்ப்பவர் வியக்க முளைத்த விதை - அந்த விதை?

- [பல்]

Vidukathai in Tamil With Answer

மண்ணிலே பிறந்து விண்ணிலே மறையுது - அது என்ன?

- [நிலா]

நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம் - அது என்ன?

- [மீன்]

நிலத்திலே முறைக்காத செடி நிமிர்ந்மு நிற்காத செடி - அது என்ன?

- [தலைமுடி]

தொப்பை பயனுக்கு ஒரு வாசல் தோழனுக்கு இரண்டு வாசல் - அது என்ன?

- [சட்டை]

தச்சர் கொத்தனார் செய்யாத தேர் தானே கிளம்பும் சித்திர தேர் - அது என்ன?

- [புற்று]

சிவப்பு மொசைக் கொட்டை பகட்டும் பட்டு சட்டை அந்த சட்டை - அது என்ன?

- [பட்டுப்பூச்சி]

. உணவை எடுப்பான், எல்லோருக்கும் கொடுப்பான், ஆனால் தான் மட்டும் உண்ணமாட்டான் - அவன் யார்?

- [அகப்பை]

உதைக்க தெரிந்தவனுக்கு நன்கு உழைக்கவும் தெரியும் - அவன் யார்?

- [கழுதை]

உமிபோல் பூ பூக்கும் சிமிழ்போல் காய் காய்க்கும் - அது என்ன?

- [நெல்லிக்காய்]

உணவு கொடுத்தால் வளருவான், நீர் கொடுத்தால் மாண்டு போவான் - அவன் யார்?

- [நெருப்பு]

Vidukathai in Tamil With Answer

உறங்காமல் தவிப்பவன், ஊருக்குள் வந்தால் பலரை பலி வாங்குவான் - அவன் யார்?

- [சுனாமி]

உயிரில்லாதவன் தினமும் ஓயாமல் ஓடுகிறான் - அவன் யார்?

- [கடிகாரம்]

கடலில் பிறந்தவன், அவன் இல்லாத வீடே இல்லை - அவன் யார்?

- [உப்பு]

மண்மீது குடையாவான், மழைக்கு துணையாவான் - அவன் யார்?

- [மரம்]

ஊருக்கெல்லாம் ஒரே ஆடை - அது என்ன?

- [வானம்]

கையுண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை - அவன் யார்?

- [சட்டைத்துணி]

அள்ள முடியும், கிள்ள முடியாது - அது எது?

- [தண்ணீர்]

ஒற்றை முத்துக்கு ஒரு பெட்டி, இரட்டை முத்துக்கும் ஒரே பெட்டி - அது என்ன?

- [வேர்க்கடலை]

மூன்று கொண்டை வைத்திருப்பாள் ஆனால் பெண் அல்ல - அது என்ன?

- [அடுப்பு விளிம்புகள்]

ஊரையே சுற்றுவான் ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் - அவன் யார்?

- [செருப்பு]

பத்து திங்கள் இருட்டறையில் இருந்தவன், விடுதலையானதும் அழுகிறான் - அவன் யார்?

- [பிறக்கும் குழந்தை]

தேவைப்படும்போது பையை நிரப்பலாம், ஆனால் தேவைக்கு மேலே பையை நிரப்ப முடியாது - அது என்ன?

- [வயிறு]

Vidukathai in Tamil With Answer

இரவிலே எழும் தீபம், பகலில் பார்க்க முடியாது - அது என்ன?

- [நிலவு]

உடைக்க முடியாத ஓட்டிற்குள் ஒளிந்திருப்பான் கள்ளன் - அவன் யார்?

- [ஆமை]

ஒருநாள் முழுமுகம் காட்டுவான், ஒருநாள் முகமே காட்ட மாட்டான் -அவன் யார்?

- [நிலவு]

வீடு கட்டத் தேவை சாரம். வீட்டு ஒளிக்குத் தேவை இன்னொரு சாரம் - அது என்ன சாரம்?

- [மின்சாரம்]

உடல் முழுதும் நூறுகட்டு, உச்சி முடிக்கு கட்டே இல்லை - அது என்ன?

- [தென்னை மரம்]

நீரில் மிதக்கும் பூ, இரவில் பூக்கும், பகலில் உறங்கும் - அது என்ன பூ?

- [அல்லிப்பூ]

போதையின்றி தள்ளாடினாலும், புறப்படும் ஊர் போய் சேருவான் - அது என்ன?

- [கப்பல்]

Vidukathai in Tamil With Answer

ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன?

- [இமைகள்]

ஆயிரம்பேர் திரண்டாலும், அணு அளவு கூட தூசி கிளம்பாது - அது என்ன?

- [எறும்புக்கூட்டம்]

குளிருக்கு கல்லாவான், அனலுக்கு தண்ணீராவான் - அது என்ன?

- [பனிக்கட்டி]

கிட்ட இருக்கும் பட்டணம் எட்டி பார்க்க முடியாது - அது என்ன?

- [நமது முதுகு]

பெட்டியை உடைத்தால் முத்துக்கள் - அது என்ன?

- [மாதுளம் பழம்] 

Tags:    

Similar News