கதை சொல்றோம்..விடுவிக்கிறீங்களா..? அதாங்க விடுகதை..விடுகதை..!
Vidukathai Tamil With Answer-விடுகதை என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல.அது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் துணை நிற்கும்.
Vidukathai Tamil With Answer-அந்த காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தபோது குழந்தைகள் பெரும்பாலும் தாத்தா,பாட்டியிடமே வளர்ந்தார்கள். மாலை மற்றும் இரவு நேரங்களில் தாத்தா, பாட்டியிடம் கதைகள் கேட்பதே பெரிய பொழுதுபோக்கு. ஜாலியாக பாட்டி அல்லது தாத்தாவை சுற்றி ஒரு வாண்டுக்கும்பல் உட்கார்ந்து இருக்கும். அறிவு வளரும் கதைகள், கற்பனை வளரும் கதைகள் என பலவிதமான கதைகளை கூறுவார்கள். அதில் ஒன்று விடுகதைகள். இது குழந்தைகளின் அறிவாற்றலை வளர்ப்பதுடன், கூர்ந்து சிந்திக்கும் மனப்பாங்கை வளர்க்கிறது. இதனால் மனம் ஒருங்கிணைப்பு கிடைத்து எதையும் கூர்ந்து செய்யும் ஆற்றல் பெறுவார்கள்.
ஆனால், இன்று கூட்டுக்குடும்பம் சிதறிப்போய் எல்லோரும் பணம் பணம் என்று பணத்தின் பின்னால் பிணம்போல அலைகிறோம். குழந்தைகள் வளர்ப்பில் கோட்டைவிடுகிறோம். அதனால் குழந்தைகள் தவறான வழிகளுக்குச் செல்கின்றனர். சிலருக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள்.
வேண்டாம் பெற்றோரே..! குழந்தைகளை தாத்தா பாட்டியோடு வளரவிடுங்கள். அவர்கள் அறிவுஜீவிகளாக உயர்வார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு விடுகதைகளும் முக்கிய பங்காற்றுகிறது. இதோ உங்களுக்காக விடுகதைகள்..! வாங்க கதையை விடுவிங்க..!
அடிகளை வாங்கி நம்மை ஆட வைப்பான் அவன் யார்?
பதில்:பறை
திட்டி திட்டி தீயில் போட்டாலும் அள்ளி அள்ளி அனலில் போட்டாலும் வாரி வாரி வாசம் தருவான். மனம் குளிர நறுமணம் தருவான்
அவன் யார்?
பதில்:சாம்பிராணி
அச்சில்லா சக்கரம் அசைந்தாடும் சக்கரம் அணிந்தால் அழகாகும் பெண்ணின் கரம்
அது என்ன?
பதில்:வளையல்
உன் அறிவுக்கும் பொருளாவேன் இரவின் அழகுக்கும் துணையாவேன் நான் யார்?
பதில்:மதி(நிலவு)
காலில்லாமல் ஓடுவான் அவன் யார்?
பதில்:பாம்பு
ஆயிரம் பேர் கட்டிய அழகு மண்டபம் ஒருவர் கண்பட்டு உருக்குலைந்து போனதாம் அது என்ன?
பதில்:தேன்கூடு
தொடமுடியாத உயரத்தில் தொடர்ந்து வரும் ராணி;பகலில் வெளிவராத தேனி அவள் யார்?
பதில்:நிலவு
ஒன்றினுள் அடைக்க முடியும் ஆனால் அல்ல முடியாது;உணர முடியும்,ஆனால் உருவம் இல்லாதது.அது யார்?
பதில்: காற்று
ஒரு கால் மனிதனுக்கு உடலெல்லாம் கைகள்.அவன் யார்?
பதில்:மரம்
உடல் முழுதும் ஓட்டைகளை கொண்டவன்;ஆனாலும் தண்ணீரை சேர்த்து வைப்பவன் அவன் யார்?
பதில்:ஸ்பான்ச்(sponge)
நாம் சாப்பிடுவதற்காக வாங்கும் ஒரு பொருளை கடைசி வரை சாப்பிட முடியாது அது என்ன?
பதில்:தட்டு
இளமையில் உயரமாகவும் முதுமையில் குள்ளமாகவும் மாறுபவன் யார்?
பதில்: மெழுகுவர்த்தி
எத்தனை மாதங்கள் 28 நாட்களை கொண்டுள்ளன?
பதில்: எல்லா மாதங்களும்
உள்ளே செல்வதற்கு எளிதாகவும் வெளியே வருவதற்கு கடினமாகவும் இருக்கும் அது என்ன?
பதில்:பிரச்னைகள்
முள் இருந்தும் குத்தாதவன் யார்?
பதில்: கடிகாரம்
தமிழ் விடுகதைகள் 400 with Answers
உங்களுக்கு சொந்தமான ஒன்றை மற்றவர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் அது என்ன?
பதில்: உங்கள் பெயர்
சுலபமாக உடைக்க கூடிய ஒன்று ஆனால் உங்களால் அதை தொடமுடியாது அது என்ன?
பதில்: நீங்கள் செய்யும் சத்தியங்கள்
ஒரே கேள்வியை எத்தனை முறை கேட்டாலும் வெவ்வேறு பதில்கள் வரும் ஆனால் அந்த எல்லா பதில்களும் சரியானதாக இருக்கும்.அந்த கேள்வி என்ன?
பதில்:time என்ன?
நீங்கள் சாப்பிட கூடிய நிறம் (colour) என்ன?
பதில்: ஆரஞ்சு
ஒரு அறையின் அனைத்து இடங்களையும் இதனால் நிரப்ப முடியும். ஆனால், எந்த இடத்தையும் ஆக்ரமித்து கொள்ளாது அது என்ன?
பதில்:ஒளி
எட்டுக் கை குள்ளனுக்கு ஒற்றை கால்
அவன் யார்?
பதில்:குடை
எல்லோரும் ஓய்வெடுத்தாலும் ஓய்வெடுக்காதவன் யார்?
பதில்: கடிகாரம்
ஒற்றைக்கால் ஆட்டக்காரன். ஒய்யார ஆட்டக்காரன். ஓயும் போது மண் சேருவான். அவன் யார்?
பதில்:பம்பரம்
பகலிலே நீல நிற சாலை. இரவிலே மஞ்சள் நிற சோலை. அது என்ன?
பதில்: வானம்
நடுங்க வைப்பான் அனைவரையும். அடங்கி போவான் அனலிடம் அது என்ன?
பதில்:குளிர்
சாப்பாடு போட்டால் வளரும். தண்ணீ கொடுத்தால் அழியும். அது என்ன?
பதில்: நெருப்பு
ஒல்லி உடம்புக்காரன். ஊரை எரிக்கும் குசும்புக்காரன். அவன் யார்?
பதில்: தீக்குச்சி
துடித்துக்கொண்டே இருக்கும். இதயமும் அல்ல;இரவு பகல் விழித்துக் கொண்டே இருக்கும்,மனிதனும் அல்ல.அவன் யார்?
பதில்: கடிகாரம்
கோபம் வந்தால் வாய் பேசுவான். நன்றிக்கடனுக்கு வால் வீசுவான். அவன் யார்?
பதில்:நாய்
உயரத்தில் பிறப்பான். தாகத்தை தீர்ப்பான். அவன் யார்?
பதில்:இளநீர்
வற்றாத நீர். தாகம் தீர்க்க பயன்படாத நீர்: தண்ணீர் அல்ல அது என்ன?
பதில்: கண்ணீர்
அவன் அழுகையில் ஒளிந்திருக்கும். வெளிச்சம் அது என்ன?
பதில் : மெழுகுவர்த்தி
ஒருத்தன் ஒட்டியதை இன்னொருவன் பிரிப்பான் அவன் யார்?
பதில்: கடிதம்
பொட்டு போல் இலை:முத்து போல் பூ பூக்கும்; தின்னும் காய் கொடுக்கும்:தின்னாத பழம் கொடுக்கும்.அவன் யார்?
பதில்: முருங்கை மரம்
பிறப்பதும் தண்ணீரிலே.. இறப்பதும் தண்ணீரிலே அவன் யார்?
பதில்:உப்பு
கண்ணில் தென்படும் அவனை கையில் பிடிக்க முடியாது?
பதில்:புகை
ஆள் கொளுத்தும் வெயிலில் ஆசாமி விளைகிறான் அவன் யார்?
பதில்:உப்பு
கை இருந்தும் விரல் இல்லாதவன்; கழுத்து இருந்தும் தலை இல்லாதவன்; உடல் இருந்தும் உயிர் இல்லாதவன் அவன் யார்?
பதில்:சட்டை
லட்சம் பேர் கொண்ட படை திரண்டாலும் ஒரு தூசு, புழுதி கிளம்பாது அவர்கள் யார்?
பதில்: எறும்புகள்
வந்தாலும் சிக்கல் வரலனாலும் சிக்கல்:அது என்ன?
பதில்: மழை
அவன் தலையை எடுத்தால் நம் தாகம் தீர்ப்பான் அவன் யார்?
பதில்:இளநீர்
ஆள்செல்லாத கிணற்றில் தாகம் தீர்க்கும் சீனி தண்ணி
பதில்:இளநீர்
ஒரே ஒரு உரசில் உயிரை மாய்த்து கொள்ளும் அது என்ன?
பதில்: தீக்குச்சி
தாழ்ப்பாள் இல்லாமல் கதவு தானாக திறக்கும் மூடும் அது என்ன?
பதில்:கண் இமை
ஒரு குற்றம்,அதை செய்ய முயற்ச்சித்தால் தண்டனை கிடைக்கும்:ஆனால் செய்து விட்டால் அவனை தண்டிக்க முடியாது. அந்த குற்றம் என்ன?
பதில்: தற்கொலை
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
பதில்: புறா
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
பதில்: உளுந்து
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
பதில்: பூனை
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
பதில்: முதுகு
இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?
பதில்: மின்மினிப் பூச்சி
பற்கள் இருக்கும் ஆனால் கடிக்க மாட்டான் அவன் யார்?
பதில்: சீப்பு
சங்கீத பாட்டுக்காரன் மழையில் கச்சேரியே செய்வான் அவன் யார்?
பதில்: தவளை
காற்றை குடித்து, காற்றில் பறப்பான் அவன் யார்?
பதில்: பலூன்
காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
பதில்: முள்
காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோசம் அது என்ன?
பதில்: வானம்
கையுண்டு கழுத்துண்டு தலையுண்டு உயிரில்லை அது என்ன?
பதில்: சட்டை
சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?
பதில்: கிளி
தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் அது என்ன?
பதில்: கப்பல்கள்
மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?
பதில்: ஒட்டகம்
சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?
பதில்: பப்பாளி விதைகள்
நடக்கத் தெரியாதவன் நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?
பதில்: கைகாட்டி
நடலாம் பிடுங்க முடியாது அது என்ன?
பதில்: பச்சை குத்துதல்
நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?
பதில்: வெங்காயம்
நடைக்கு உவமை நளனக்கு தூதுவன் அவன் யார்?
பதில்: அன்னம்
சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை அது என்ன?
பதில்: தீக்குச்சி
தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும் அது என்ன?
பதில்: தபால் தலை
உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?
பதில்: கடல் அலை
காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
பதில்: சாமரம்
கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான் அது என்ன?
விடை: வெங்காயம்
எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள் அவள் யார்?
விடை: செல்பேசி
இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?
விடை: பட்டாசு
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2