Uyirmei eluthukkal in tamil 216-உயிரும் மெய்யும் சேர்வது உயிர்மெய் எழுத்து..!
உயிர்மெய் எழுத்துகள் எப்படி பிறக்கின்றன? தமிழில் உயிர்மெய் எழுத்து எத்தனை உள்ளது என்பன போன்ற விபரங்களை பாப்போம் வாங்க.;
Uyirmei eluthukkal in tamil 216
உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. உலகில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 3000-லிருந்து 8000-வரை இருக்கும் என்று மொழியியலாளர்கள் கூறுகிறார்கள்.
Uyirmei eluthukkal in tamil 216
இவற்றுள் சில மொழிகளே எழுதவும் பேசவும் பயன்படுகின்றன. மேலும் வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் அதனிலும் குறைவே. இவற்றிற்கெல்லாம் தாயாகத் திகழ்பவை ஆறு மொழிகள் என்று கூறலாம். அவையாவன :
- எபிரேய மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
- கிரேக்க மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
- இலத்தின் மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
- சமஸ்கிருத மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
- தமிழ் மொழி
- சீன மொழி
அவ்வகையில், இன்றும் எழுத்தளவிலும் பேச்சளவிலும் தன் தொன்மையைக் காத்து செம்மொழியாய் நிமிர்ந்து நிற்கிறது, தமிழ் மொழி.
Uyirmei eluthukkal in tamil 216
தமிழ் மொழி தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என பலவகை சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்
அதுமட்டுமல்லாமல், தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, இந்தி என பல மொழிகளில் புலமைபெற்றிருந்த முண்டாசு கவிஞன் மகாகவி பாரதி
யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்;என்று பாடியதும்,
தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதும், தமிழ்மொழி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று சிந்திக்கத்தக்கது.
Uyirmei eluthukkal in tamil 216
நீண்டநாள் உயிர்வாழும் சுவாசப்பயிற்சி
மேலும், தமிழ்மொழி இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துகளை உச்சரிக்கும்போது சுவாசப் பையிலிருந்து குறைந்த காற்றே வெளியேறுகிறது. உலகிலுள்ள பல மொழிகள், பேசும் போது அதிகமான காற்று வெளியேற்றக் கூடிய வகையில் அமைந்துள்ளன. பேசும் போது அதிகமான காற்று வெளியேறி செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலாளர் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், நம் வாழ்நாளில் அதிக சுவாசக்காற்றை வெளியேற்றாமல் இருந்தோமேயானால் நீண்டநாள் வாழலாம் என்று ஓர் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. ஆகவே தமிழ் மொழியைப் பேசினால் சுவாசக்காற்றை மிச்சப்படுத்தி நீண்டநாள் வாழலாம் என்பது எழுதப்படாத உண்மையாக இருக்கிறது. நமது தமிழ்மொழி பேசுவதிலேயே அது சுவாசப்பயிற்சியாக விளங்குகிறது. மொழியால் வாழ்கிறோம்.
தமிழ் எழுத்துகளில் இன்று நாம் உயிர்மெய் எழுத்து குறித்து பார்க்கப்போகிறோம்.
Uyirmei eluthukkal in tamil 216
உயிர்மெய் எழுத்துகள் – 216. ஒரு மெய் எழுத்தும் ஓர் உயிர் எழுத்தும் சேர்ந்து பிறக்கக் கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து. (க் + அ = க). மெய் எழுத்துகள் பதினெட்டும் (18), உயிர்எழுத்துகள் பன்னிரெண்டும் (12) சேர்ந்து (18 x 12 = 216) இருநூற்று பதினாறு (216) உயிர்மெய் எழுத்துகளாகப் பிறக்கின்றன.
மொத்த தமிழ் எழுத்துக்கள்.
தமிழ் எழுத்துக்களின் மொத்த கூட்டுத்தொகை 247 அது பின்வருமாறு பார்க்கலாம்.
உயிர் எழுத்துக்கள் – 12
மெய் எழுத்துக்கள் – 18
உயிர்மெய் எழுத்துக்கள் – 216
ஆய்த எழுத்து – 1
மொத்த எழுத்துக்கள் – 247
Uyirmei eluthukkal in tamil 216
உயிர்மெய் எழுத்துக்களின் தோற்றம்
உயிர் எழுத்துக்களோடு மெய் எழுத்துகள் கூடி அதாவது சேர்ந்து வருவது உயிர்மெய் எழுத்துகள். இதனை பின்வருமாறு எழுதலாம்.
உயிர் + மெய் = உயிர்மெய்
உதாரணமாக
அ + க் = க
ஆ + க் = கா
இ + க் = கி
ஈ + க் = கீ
உ + க் = கு
ஊ + க் = கூ
எ + க் = கெ
ஏ + க் = கே
ஐ + க் = கை
ஒ + க் = கொ
ஓ + க் = கோ
ஒள + க் = கௌ
இவ்வாறு உயிர் எழுத்துக்கள் 12ம் மெய் எழுத்துக்கள் 18ம் சேர்ந்து மொத்தம் 216 எழுத்துக்கள் பிறக்கின்றன. அதாவது – 12 X 18 = 216. (உயிர்மெய் எழுத்துகளின் மொத்தம் படமாக தரப்பட்டுள்ளது.