Uyirmei eluthukkal-உயிர்மெய் எழுத்து எத்தனை? அவை எப்படி பிறக்கின்றன..? தெரிஞ்சுக்கங்க..!
மொழியின் வடிவம் எழுத்து. அறிவின் வளர்ச்சியில் மொழியானது சைகைகளில் தொடங்கி, ஓசையாக உருவாகி எழுத்தாக வடிவம் பெற்றுள்ளது.
Uyirmei eluthukkal
" தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர். "
உயிரோடு மெய் சேர்ந்தால் தான் ஒரு உயிரினம் முழுமை பெறும். ஆமாம் ஒரு உயிருள்ள ஜீவனாக முழுமை பெறமுடியும். அதைப்போலத்தான் மொழியும். குறிப்பாக தமிழ் மொழியில் உள்ள எழுத்து வடிவம் போல பிற மொழிகளில் காண முடியாது. அதனால்தான் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணேன் என்றார் பாரதி.
தமிழில் மட்டுமே உயிர் எழுத்துக்கள் வார்த்தைகளுக்கு ஏற்ப வடிவமைக்க எதுவாக உள்ளன.
ஒரு உயிரெழுத்தும் மெய்யெழுத்தும், இணைந்து உயிர்மெய் யெழுத்துக்களை உருவாக்குகின்றன.
Uyirmei eluthukkal
உதாரணமாக
உயிர்மெய் எழுத்துக்கள் என்றால், ஒரு உயரெழுத்தும் , ஒரு மெய்யெழுத்தும் ஒன்றாக சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் ஆகின்றன. இது பொதுவாக 12 உயிர் எழுத்துக்களையும், 18 மெய்யெழுத்துக்களையும் சேர்த்து 216 உயிர்மெய் எழுத்துக்களாக பிறக்கின்றது.
உதாரணமாக கூறவேண்டும் என்றால்,
க் + அ=க
க் + ஆ=கா
க் + இ=கி
க் + ஈ=கீ
உயிர்மெய் :
உயிர்மெய் எழுத்துகள் – 216.
ஒரு மெய் எழுத்தும் ஓர் உயிர் எழுத்தும் சேர்ந்து பிறக்கக் கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து. (க் + அ = க).
மெய் எழுத்துகள் பதினெட்டும் (18), உயிர்எழுத்துகள் பன்னிரெண்டும் (12) சேர்ந்து (18 x 12 = 216) இருநூற்று பதினாறு (216) உயிர்மெய் எழுத்துகளாகப் பிறக்கின்றன.
Uyirmei eluthukkal
இவ்வெழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.
உயிர்மெய் குறில் எழுத்துகள் 90 (உயிர்க் குறில் 5 x 18 மெய் எழுத்துகள்) ஒலிக்கும் மாத்திரை அளவு ஒன்று.
உயிர்மெய் நெடில் எழுத்துகள் 126 (உயிர் நெடில் 7 x 18 மெய் எழுத்துகள்) ஒலிக்கும் மாத்திரை அளவு இரண்டு.
உயிர்மெய் எழுத்துகள் அட்டவணை :