Uyir eluthukkal in tamil-உடலுக்கு உயிர் போல, மொழிக்கு உயிர்தரும் உயிரெழுத்து..!
ஒரு மொழி வடிவம் பெறுவது, அந்த மொழியின் எழுத்துகளால் தான். குறிப்பாக உயிர் எழுத்துகளே சொற்கள் பிறப்பதற்கு தடம் காட்டுகின்றன.;
Uyir eluthukkal in tamu
மொழி
உடலுக்கு உயிர் எப்படி முக்கியமோ, அதைப்போல மொழிக்கு எழுத்தும் முக்கியம். எழுத்துகள் இல்லாமல் மொழி வடிவம் பெறாது. மொழி தொடக்க காலத்தில் சைகைகளாக இருந்தன. அது சைகை மொழி எனப்பட்டது. சொற்கள் பிறக்காத காலங்களில் சைகைகளே பேச்சின் வடிவமாக இருந்தது.
பேச்சு உருவானபோது மொழி ஒரு வடிவம் பெற்றது. சொற்கள் பிறந்தன. சொற்கள் பிறந்ததால் மொழிக்கு வார்த்தை வடிவம் தேவைப்பட்டது. வார்த்தைகள் வடிவம் பெற எழுத்துகள் உருவாக்கப்பட்டன. தனித்தனி எழுத்துகள் ஒன்று சேர்ந்து சொற்களை உருவாக்கின. பல சொற்கள் இணைந்து வாக்கியங்கள் உருவாக்கப்பட்டன. இப்படியாக மொழி ஒரு முழுமையான வடிவத்துக்கு வந்துள்ளது.
Uyir eluthukkal in tamil
அந்த அடிப்படையில் தமிழில் உயிர் எழுத்துகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கவுள்ளோம்.
எழுத்து என்றால் என்ன?
பேச்சுக்கான மாற்று வடிவமாக உருவாக்கப்பட்டது, எழுத்து. பழங்காலத்தில் இருந்தே எழுத்துகள் இருந்துள்ளன என்பதற்கு சான்றுகள் பல உள்ளன. எழுத்து என்றால் ஓவியம் என்று பொருள். காரணம், எழுத்துகளின் தோற்றத்திற்கு அடிப்படை ஓவியங்களேயாகும்.
எழுத்துகளின் வகைகள்
எழுத்துகளை முதல் எழுத்துகள் மற்றும் சார்பு எழுத்துகள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
Uyir eluthukkal in tamil
முதல் எழுத்துகள்
1. உயிர் எழுத்துகள்
2. மெய் எழுத்துகள்
சார்பு எழுத்துகள்
1. உயிர்மெய் எழுத்துகள்
2. ஆயுத எழுத்து
தமிழில் உயிர் எழுத்துகள் 12 உள்ளன
தமிழின் அடிப்படை எழுத்துகளான அ முதல் ஒள வரை உள்ள எழுத்துகள் உயிர் எழுத்துகளாகும். இதில் மொத்தம் 12 எழுத்துகள் உள்ளன. இந்த எழுத்துகள் உச்சரிப்பதற்கு எளிமையாகவும், இனிமையாகவும் அமைந்துள்ளன. தமிழில் சிறப்பு எழுத்தாக இருப்பது ஆய்த எழுத்து. ஆய்த எழுத்து ஃ ஆகும்.
Uyir eluthukkal in tamil
உயிர் எழுத்துகளின் வகைகள்
உயிர் எழுத்துகள் இரண்டு வகைப்படும்.
1. குறில் எழுத்துகள்
குறைந்த அளவு நேரமே ஒலிக்கும் எழுத்து குறில் எழுத்து எனப்படுகிறது.
அ, இ, உ, எ, ஒ ஆகிய இந்த ஐந்தும் குறுகி ஒலிப்பதால் இது குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து என்று அழைக்கப்படுகிறது.
Uyir eluthukkal in tamil
2. நெடில் எழுத்துகள்
நீண்டு ஒலிக்கும் எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படுகிறது.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நீண்ட ஒளியுடையதாக இருக்கின்றன. அதனால் இவை நெடில் எழுத்துகள் அல்லது நெட்டெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.
தமிழ் உயிர் எழுத்துகள்