Today Education News in Tamil-அந்தந்த பள்ளிகளிலேயே நீட் தேர்வு பயிற்சி..! புதிய உத்தரவு..!
ஏற்கனவே நீட் மற்றும் ஜேஇஇ போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
Today Education News in Tamil
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்காக, தமிழ்நாட்டில் 438 அரசுப் பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், முழுமையாக நடத்த முடியாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
Today Education News in Tamil
ஆனாலும், அரசு மாதிரி பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகளில் மட்டும் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில், பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விருப்பமுள்ள 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Today Education News in Tamil
வேலை நாட்களில் நாள்தோறும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பயிற்சி அளிக்கவும், வார இறுதி மற்றும் தேர்வு விடுமுறை நாட்களிலும் பயிற்சி அளிப்பதற்கான வழிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர் குழுவை அமைத்து, நீட் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களையும் தேர்ச்சி பெற வைக்கவேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. கடந்த காலங்களில் அரசு பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் குறிப்பிடும்படியான அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.