நவீன காலத்திற்கேற்ப கல்வி நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக வேண்டும்: துணைவேந்தர் பேச்சு

நவீன காலத்திற்கேற்ப கல்வி நிறுவனங்கள் டிஜிட்டல் மயம் ஆகவேண்டும் என்று பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் வலியுறுத்தினார்.

Update: 2022-04-19 12:00 GMT

பட்டமளிப்பு விழாவில் தலைமை உரையாற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை.

"நவீன காலத்திற்கேற்ப கல்வி நிறுவனங்கள் டிஜிட்டல் மயம் ஆகவேண்டும்" -JKKN பல் மருத்துவக்கல்லூரி 30வது பட்டமளிப்பு விழாவில், சென்னைஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தர் வலியுறுத்தினார். 

சிறப்புரையாற்றும் இயக்குனர் ஓம் சரவணா.

குமாரபாளையம், JKKN பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 30வது பட்டமளிப்பு விழா 19ம் தேதி செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ள JKKN கல்வி நிறுவன அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மருத்துவர். ஏ.சிவகுமார் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

பட்டம் பெறும் மாணவி.

JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். அவர் பேசும்போது "புதியதொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கேற்ப மாணவ, மாணவியர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்" என வலியுறுத்தினார்.

JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஓம்சரவணா சிறப்புரை ஆற்றுகையில், "நவீன தொழில்நுட்பங்களால் புதிய மாற்றங்களானது, பழங்கால மாற்றங்களைக் காட்டிலும் விரைவாக நடைபெறுகின்றன. இவற்றை மாணவ, மாணவியர்கள் கருத்தில் கொண்டு, தங்களின் உருவாக்கும் திறனை பெருக்கிக் கொள்வதோடு, நவீன காலத்திற்கேற்ப அவர்களை  மேம்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் பட்டம் பெற்றவுடன் பல் சிகிச்சை மையம் நடத்தும் அளவிற்கு நவீன தொழில்நுட்ப பல்மருத்துவ அறிவினை பெற்றிருக்க வேண்டும்"என தெரிவித்தார்.

விருந்தினர்களை  கவுரவிக்கும் நிகழ்வு.

சென்னை, ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர். பி.வி.விஜயராகவன் முதன்மை விருந்தினராக பங்கேற்று பேசுகையில் "நவீன காலத்திற்கேற்ப கல்வி நிறுவனங்களானது டிஜிட்டல்மயம் ஆகவேண்டும்" என்றார்.

சென்னை, ஸ்ரீராமச்சந்திரா பல் மருத்துக்கல்லூரியின் வாய்வழி நோயியல் துறையின் (Department of Oral Pathology) பேராசிரியரும், தலைவருமான டாக்டர். தமிழ்ச்செல்வன், கௌரவ விருந்தினர் உரையில், JKKN பல் மருத்துவக்கல்லூரியானது சுற்றுப்புறத்தில் உள்ள  பல கிராமங்களில் பல்விழிப்புணர்வு முகாம்கள் அதிகளவு நடத்தியுள்ளதாக கூறினார்.

விருந்தினர்களை கவுரவிக்கும் நிகழ்வு.

மேலும் விழாவில் பங்கேற்ற 103 இளநிலை மற்றும்16 முதுநிலை பல் மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு முதன்மை விருந்தினரும், கௌரவ விருந்தினரும் பட்டங்களை வழங்கினர். இறுதியில், JKKN பல் மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வர் மருத்துவர். கே.கருணாகரன் நன்றியுரை ஆற்றினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Tags:    

Similar News