கற்பித்தல் அறிவின் தொடக்கநிலை..! எப்டீ..? ஆசிரியருக்கு ஒரு கவிதை..!
Tamil Kavithai for Teachers Day-கல்வி, என்பது அறிவு வளர்ச்சிக்கான அடிப்படை. அது வேலைக்கான வியாபாரம் அல்ல என்பதைக் கற்றுத்தந்த ஆசான்களுக்கு ஒரு கவிதை.;
Tamil Kavithai for Teachers Day
ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த பங்குதாரர். வெறும் கல்வியை மட்டுமல்லாமல் வாழ்க்கையையும் கற்றுக்கொடுக்கும் தாய், தந்தை. நீ என்னவாக வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் எதிர்கால சிற்பிகள். ஒரு நாட்டின் எதிர்காலத்தையே செதுக்கும் கடவுளர்கள். ஆமாம் அவர்களால் உருவாக்கப்படும் மாணவர்களே ஒரு நாட்டை தீர்மானிக்கும் சக்திகள்.
கற்றுக்கொடுப்பபது கூட கற்றலின் ஒருவழி. ஆமாம், கற்றுக்கொடுக்கக் கொடுக்க அறிவது பெருகும்.
ஆசிரியர்கள்..! (கவிதை) க.சு.பூங்குன்றன்
கையெடுத்து வணங்குகிறேன்,
என் அறிவுக்கண்களைத் திறந்த
கடவுளர்கள் நீங்கள்..
ஆம்,
என் ஆசான்கள்..!
என் கையெடுத்து
எழுதப் பழக்கிய
என் தாய்வீடு
தொடக்கப்பள்ளி..!
வாழ்க்கைப்பயணத்தில்
எனக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுத்த
ஆசிரியர்கள்
என் கைபிடித்து
கரடுமுரடான பாதைகளை
கடக்கவைத்தனர்..!
அவர்களை
நான்
கை எடுத்து வணங்குகிறேன்..!
அவர்கள்
காட்டிய பாதச் சுவடுகள்..
இன்னும் வழிகாட்டியாக
என்னை முன்னோக்கி
நகர்த்திச் செல்கிறது..!
எனை
விழாது தாங்கிப்பிடிக்கும்
தூண்களாக
கெட்டிப்பிணைப்பாக
ஒட்டிக்கிடக்கின்றனர்,
என் வாழ்க்கையொடு..!
நான் வாழ
எனக்கு ஒளியாக..
நான் முன்னேற
எனக்கு படியாக..
இருந்தவர்கள்
என் ஆசான்கள்..!
உடனிருந்தவரை
கடனுக்கு மதித்த
என் ஆசான்களின்
இழப்புகள்
பெரிதாகத் தெரிகின்றன
அவர்களை
விட்டுப்பிரிந்தபின்..!
இன்னொருமுறை
எனக்கொரு
வாழ்க்கை வாரா..!
பள்ளிக்கூடம் போகும்
நிலையும் வாரா..!
அதனால்,
இருக்கும்வரை
நம் ஆசான்களை
மதிப்போம்..!
படிக்கும் காலத்தில்
அவர்கள்
சொற்படி நடப்போம்..!
வாழ்க்கை எமக்கு வெளிச்சமாகும்..!
களிமண்ணாய் இருந்த
என்னை
உளிகொண்டு
செதுக்கி
தளிரிளம் சோலை
தரும் இதம் தந்தீர்..!
என்னை செதுக்கிய சிற்பிகள்
நீங்கள்..!
வாழ்க்கையின் ஒவ்வொரு
நகர்விலும்
உங்கள் வாசம்
என் பயணங்களில்..
ஆனாலும்
எனக்கு மழையற்ற
காலங்கள்போல
கடந்து செல்கின்றன
உங்கள் நினைவுகள்,
நீங்கா
தொடர்கதையாக..!
நான்
என்பது
நானல்ல,
நீங்கள், என் ஆசான்கள்..!
எனை
செதுக்கிய சிற்பிகள்..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2