பேங்க் வேலையா? தொழில் அதிபர் ஆகணுமா..? வணிகம் சார்ந்த பட்டம் படிங்க..!
பேங்க் ஆஃபீசர் ஆகணுமா? அல்லது தொழில் அதிபர் ஆகணுமா? வணிகத்துல பட்டம் வாங்குங்க. உங்க கனவை நிறைவேத்துங்க.;
தமிழர்கள் சங்க காலம் முதல் வாணிபத்தைக் கடல்கடந்து மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தி வந்தார்கள். அத்தகைய வாணிபமானது பண்டமாற்று முறை தொடங்கி பணப் பரிவர்த்தனை வரை தமிழர்களால் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகிறது. தற்போதும் பல தொழில்களை தமிழகத்தில் வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.
அத்தகைய வணிகத்துறை, இன்றைய காலகட்டத்தில் கீழ்குறிப்பிட்டவாறு பாடப்பிரிவுகளாக வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. வணிகத்துறை கல்வியில் தனி இடத்தை பெற்றுள்ளது. வேலைவாய்ப்புக்கான சிறந்த பிரிவாகவும் உள்ளது.
பாடப்பிரிவுகள் :
- இளங்கலை வணிக கணினிப் பயன்பாட்டியல் (B.Com (CA)
- முதுகலை வணிகவியல் (M.Com)
- இளங்கலை வணிக மேலாண்மையியல் (BBA)
- இளங்கலை வணிகவியல் (கணக்கியல் மற்றும் நிதியியல்) (B.Com(AF))
- இளங்கலை வணிகவியல் (வங்கி மற்றும் காப்பீட்டியல்) (B.Com(B&I))
- இளங்கலை வணிகவியல் (நிதிசந்தை மற்றும் பகுப்பாய்வியல்) (B.Com (FMA))
வேலைவாய்ப்புகள் :
மாணவர்கள் இப்பாடத்திட்டங்களை முதன்மைப் பாடமாகத் தேர்ந்தெடுத்துப் பயின்றால், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றலாம். மேலும் சுயதொழில் தொடங்கவும், தொழில் நிறுவனங்களில் பணிகளை சிறப்பாகச் செய்திடவும் வழிவகை செய்கின்றன.
- கணக்குப் பதிவாளர் (Accountant)
- சந்தை ஆய்வாளர் (Market Analysist)
- நிதி ஆய்வாளர்(Financial Analysist)
- வங்கிகளில் வேலைவாய்ப்பு (Bank Jobs)
- காப்பீட்டுத்துறை (Insurance)
- வருமான வரித்துறை (Income Tax )
- நிதி மூலதனச் சந்தை (Investment)
- ஆடிட்டர் (Chartered Accountant)
போன்ற துறைகள் மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
JKKN கல்லூரியில் வணிகத்துறையின் சிறப்பம்சங்கள் :
பாடத்திட்டங்கள் சார்ந்த கருத்தரங்கம், பயிலரங்கம் பயிற்சிப் பட்டறை சிறந்த அறிஞர்களைக் கொண்டு ஆண்டுதோறும் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது. பாடத்திட்டம் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு, மாணவர்கள் சென்று தொழில் நுட்பங்களை அறிந்துவர கல்லூரியின் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. (Inplant Training)
வளாக நேர்காணலில் வெற்றிபெற மாணவர்களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் கல்லூரியில் கற்றுத்தரப்படுகிறது.இத்துறையில் பயின்ற மாணவர்கள், கல்லூரியில் நடைபெறும் வளாக நேர்காணலில் தேர்ச்சிப் பெற்று இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ் , ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற நிறுவனங்களில் பணி வாய்ப்பினைப் பெற்று வருகின்றார்கள்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கணினிப் பயன்பாடுகளுடன் வணிகக் கல்வியே சிறந்த கல்வியாக விளங்குகிறது. மாணவர்கள் ஆளுமை மற்றும் தகவல் தொடர்புத் திறனை வளர்த்து அவர்களை பெருநிறுவனங்களின் பணியாளர்களாகவும், முதலாளிகளாகவும் தொழில் முனைவோர்களாகவும் உயர வணிகம் சார்ந்த பட்டங்கள் வழிவகை செய்கின்றன.
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி :
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வழங்கப்படும் வணிக படிப்புகள் மிகவும் குறைந்த கல்விக் கட்டணத்தில் அனுபவம் மிக்க பேராசிரியர்களைக் கொண்டு சிறப்பாகப் பயிற்றுவிக்கப்படுகிறது.
By
Dr.Mrs.V.R.PARAMESWARI M.Sc., Ph.D., FRCS
DEAN
JKKN COLLEGE OF ARTS & SCIENCE
KOMARAPALAYAM, NAMAKKAL
M.S.PUNITHAMALAR M.Com(CA)., MBA., M.Phil., Ph.D.,
HEAD & ASSISTANT PROFESSOR
DEPARTMENT OF COMMERCE CA.,
JKKN COLLEGE OF ARTS & SCIENCE
KOMARAPALAYAM, NAMAKKAL