JKKN வித்யாலயா பள்ளியில் நாளை மறுநாள் மாணவர் கூட்டமைப்பு கருத்தரங்கம்
JKKN வித்யாலயா பள்ளியில் நாளை மறுநாள் மாணவர் கூட்டமைப்பு சார்பில் வறுமையின்மை குறித்த கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.;
குமாபராளையம்,JKKN வித்யாலயா பள்ளியில் "மாணவர்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை மறுநாள் (20ம் தேதி) "வறுமையின்மை" என்ற தலைப்பில் கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கில் JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா தலைமை தாங்க உள்ளார். இக்கருத்தரங்கில் 6ம் வகுப்பு மாணவ,மாணவிகள் "வறுமை பற்றிய அறிமுகம் "வறுமைக்கான காரணங்கள்". "வறுமைக்கு எதிரான அமைப்புகள்" "வறுமையின் வகைகள்" போன்ற தலைப்புகளில் கருத்துக்களை பகிந்துகொள்ள உள்ளனர்.
நாள் : 20-8-2022 சனிக்கிழமை
இடம்: நடராஜா வித்யாலயா
நேரம்: மதியம் 1.30மணி