JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்
குமாரபாளையம், JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது.;
JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் முதல்வர் ரம்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் மாணவன் சஞ்சய் உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் உணவு அவசியம். அதற்கு மூலதனம் விவசாயம். ஒரு நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் விவசாயத்திற்கு மண் வளம் அவசியம். அதன் மூலமே உணவு உற்பத்தி பெருகும். அப்போதுதான் ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறும்.
தொன்மை காலத்தில் விவசாயம் நேர்த்தியாகவும், இயற்கை முறையிலும் நடைபெற்றது எனவும் கூறினார். மாணவி தன்ஷிகா, நீர் வளம் பற்றியும், பயிர்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது எவ்வாறு நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்பதைப் பற்றியும் நீர் பாசனத்திற்காக ஆறுகள், கிணறுகள், ஏரிகள் ,குளங்கள் ஆகியவற்றில் இருந்து நீர் எவ்வாறு எடுக்கப்படுகிறது என்பதையும், நீர்ப்பாசனத்திற்கு மழை ஆதாரமாக உள்ளது எனவும் ஒளிச் சேர்க்கை நடைபெற நீர் முக்கிய காரணமாக அமைகிறது எனவும், மண்ணில் உள்ள ஊட்டச் சத்துக்களை பயிர்களுக்கு எவ்வாறு நீர் கடத்துகிறது என்பது பற்றியும் தாவரத்தின் மொத்த எடையில் 70 சதவீதம் நீர் உள்ளது என்பது பற்றியும் தெளிவாக விளக்கிக் கூறினார்.
இவ்விழாவில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் பள்ளி இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் இளம் வயதிலேயே தங்கள் திறமைகளை ஆர்வமுடன் வெளிப்படுத்துகின்றனர் எனவும் மேலும் தன்னம்பிக்கையையுடன் அனைவர் முன்னிலையிலும் தங்கள் கருத்துகளை கூறுகின்றனர். இதன்மூலமாக எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக உருவாக ஒரு வாய்ப்பு ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் தங்களது மகிழ்ச்சியினையும் பாராட்டுகளையும் பகிர்ந்து கொண்டனர்.