JKKN மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் "மாணவர் கூட்டமைப்பு சொற்பொழிவு" கருத்தரங்கம்
Student Led Conferences - குமாரபாளையம், JKKN மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் கூட்டமைப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது.;
JKKN மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் "மாணவர் கூட்டமைப்பு சொற்பொழிவு" (STUDENTS LED CONFERENCE) நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா தலைமையில் "தண்ணீர்" என்ற தலைப்பில் மாணவர் கூட்டமைப்பு சார்பில் சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் 8 ம் வகுப்பு பயிலும் 27 மாணவர்கள், 19 மாணவிகள் 'தண்ணீர்' என்ற தலைப்பில் நிலையான மேம்பாட்டு இலக்கு என்பதற்கு "சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் தண்ணீருக்கு கீழே வாழ்க்கை" என்ற தலைப்பில் தங்களின் திறமைகள், புதுமையான யோசனைகள், உண்மைகளை வெளிப்படுத்தினார்கள்.
இவ்விழாவில் பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பிற மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் புத்தகக் கல்வி மட்டுமல்லாமல் உலகளாவிய சிந்தனையும் தன்னம்பிக்கையும் பெறுவார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2