students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு

students conference - JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு நடைபெற்றது.;

Update: 2023-04-01 15:28 GMT

students conference -JKKN பொறியியல் கல்லூரியில் நடந்த மாணவர் தலைமையிலான மாநாடு.

students conference-குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு கடந்த மார்ச் 29ம் தேதி பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணிவரை நடந்தது. JKKN பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த மாநாட்டை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மாணவர்கள் நடத்தினர்.


மூன்றாம் ஆண்டு பயிலும் உமாதேவி, சுபிக்ஷா, ஆனந்தவள்ளி ஆகியோர் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்ற தலைப்பிலும்,

தனுஷ், வேலவன், சபரிவாசன், ஆகியோர் ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற தலைப்பிலும், இரண்டாம் ஆண்டு பயிலும் மோகனா, ரம்யா, கௌசல்யா, பிரியங்கா, தரணி ஆகியோர் மெக்கானிசம் ஆஃப் பயோபேட்டரி என்ற தலைப்பிலும் மற்றும் சுதாகர், பிரேம்குமார், கோகுல், ஜெயகிருஷ்ணா, தீரேஷ்வரன் ஆகியோர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற தலைப்பிலும் உரையை மிகச் சிறப்பாக நிகழ்த்தினர்.

students conference 


இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்துறை துணை விரிவுரையாளர் நிர்மல் பிரித்திவ்ராஜ், மாணவர் தலைமையிலான மாநாட்டை துவக்கி வைத்தார்.


இந்த மாநாட்டிற்கு கல்லூரி முதல்வர் ரூபன் தேவபிரகாஷ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை தலைவர் ரம்யா மற்றும் துறை பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாணவர் தலைமையிலான மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தனர். இறுதியில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News