students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு
students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு நடைபெற்றது.;
students conference-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு இன்று (ஏப்ரல் 3-ம் தேதி) காலை 10 மணி முதல் 10.45 மணி வரை நடந்தது.
JKKN பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த மாநாட்டை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்தினர்.
இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை துணை விரிவுரையாளர் தனஞ்செயன், மாணவர் தலைமையிலான மாநாட்டை துவக்கி வைத்தார். மூன்றாம் ஆண்டு பயிலும் கிருஷ்ணவேணி Artificial Intelligence என்ற தலைப்பிலும், இரண்டாம் ஆண்டு பயிலும் சத்யா ப்ளாக் செயின் (Block Chain) என்ற தலைப்பிலும் உரையை மிகச் சிறப்பாக நிகழ்த்தினர்.
இந்த மாநாட்டில் கல்லூரி முதல்வர் ரூபன் தேவபிரகாஷ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் தனஞ்செயன் மற்றும் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர் தலைமையிலான மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தனர். இறுதியில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறப்பட்டது.