தமிழக அளவிலான Wresling சாம்பியன்ஷிப் போட்டியில் JKKN பார்மசி கல்லூரி மாணவர் சாதனை
தமிழக அளவிலான Wrestling போட்டியில் JKKN பார்மசி கல்லூரி மாணவர் சில்வர் மெடல் பெற்று சாதனை படைத்துள்ளார்.;
தமிழக அளவிலான Wresling சாம்பியன்ஷிப் போட்டியில் சில்வர் மெடல் பெற்ற JKKN பார்மசி கல்லூரி மாணவர் ஆதித்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை மற்றும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர்.
தமிழக அளவிலான Wresling சாம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் மாவட்டம், மேட்டூரில் நடந்தது. அதில் JKKN பார்மசி கல்லூரி மாணவர் ஆதித்யா இரண்டாமிடம் பிடித்து,சில்வர் மெடல் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அமெச்சூர் Wrestling அசோசியேஷன் நடத்திய 23 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழக அளவிலான Wresling சாம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் மாவட்டம் மேட்டூரில் நடைபெற்றது.
இதில் 55 கிலோ எடை பிரிவில் JKKN பார்மசி கல்லூரி 3ம் ஆண்டு B.Pharm மாணவர் S. ஆதித்யா இரண்டாம் இடம் பிடித்து சில்வர் மெடலை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரது சாதனையை JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை மற்றும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர் மாணவரை நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தனர்.