திடக்கழிவு விழிப்புணர்வு பேரணி: ஸ்ரீ சக்திமயில் நர்சிங் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

News For College Students -ஈரோட்டில் நடைபெற்ற திடக்கழிவு விழிப்புணர்வு பேரணியில் குமாரபாளையம், ஸ்ரீ சக்திமயில் நர்சிங் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.;

Update: 2022-06-14 04:55 GMT

ஈரோட்டில் நடந்த திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற JKKN ஸ்ரீ சக்திமயில் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்.

News For College Students - ஈரோடு மாநகராட்சியில் 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' சார்பில் திடக்கழிவுகளை கையாளுதல் குறித்த பொதுமக்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் குமாரபாளையம் ஸ்ரீ சக்திமயில் நர்சிங் கல்லூரியில் படிக்கும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ,மாணவிகள், கல்லூரி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று பேரணியை துவக்கி வைத்த தமிழக  வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணன் உன்னி ஆகியோர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணன் உன்னி,எம்.எல் .ஏக்கள், துப்புரவு பணியாளர்கள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவ ,மாணவிகள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கமாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட மாணவிகள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் 'நம் நகரம்,நம் தூய்மை ' என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றனர். இறுதியாக மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி வ .உ.சி பூங்காவில் இருந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வரை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் திடக்கழிவுகளை கையாளுதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படச் செய்தனர்.     


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News