JKKN கலை,அறிவியல் கல்லூரியில் பெரியாரை வாசிப்போம்' மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி
குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரியாரை வாசிப்போம் மாணவர் பெருந்திரள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரியார் பல்கலைக் கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வின் ஒரு பகுதியாக 'பெரியாரை வாசிப்போம்"என்ற தலைப்பில் பெருந்திரள் வாசிப்புக் கூட்டம், வாசிப்பாளர் மன்றம் சார்பில் காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் துறைத் தலைவர் முனைவர்.உமா, வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் டீன் முனைவர் பரமேஸ்வரி தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர். சீரங்கநாயகி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீசக்திமயில் செவிலியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் முனைவர் ஜமுனாராணி கலந்து கொண்டு, பெரியார் குறித்து சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் தந்தை பெரியார் சாதி, மதம் கடந்து மண்ணில் தீண்டாமை ஒழிய பாடுபட்டவர். மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். இத்தகைய மாமனிதர் பற்றியவரலாற்றுப் புத்தகங்களை மாணவர்கள் வாசித்து அறிந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்
இந்நிகழ்வில் சுமார் 1339 மாணவர்களும், 112 பேராசிரியர்களும் பங்கேற்று பெரியார் பற்றிய உரையை உரக்க வாசித்தனர். நிறைவாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சத்தியபிரகாஷ், நன்றி பங்கேற்ற அனைவருக்கும் தெரிவித்தார்.