JKKN கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம்
JKKN கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை சார்பில் ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் கல்லூரியில் நடைபெற்றது.
குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில் பாரதி நினைவு நாளை முன்னிட்டு ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கம் 'கட்டற்ற கவிதை" எனும் தலைப்பில் நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் உமா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வரும், இணைப்பேராசிரியரும், வேதியியல் துறைத் தலைவருமாகிய மாலதி வாழ்த்துரை வழங்கினார்.
"கட்டற்ற கவிதை" எனும் தலைப்பில் கவிஞர் சுகுணன் சிறப்புரை வழங்கினார். கவிதைக் கலை என்பது மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் பாரம்பரிய கலை, மருத்துவம், பண்பாடு என்பதை நாம் இழந்து வருகின்றோம். அதை மீட்டெடுக்கும் பொறுப்பு மாணவர்களிடம் தான் உள்ளது என்பதையும் வலியுறுத்தினார். மேலும் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் எவரும் கட்டற்ற கவிதை பாடலாம் என்ற ஊக்கத்தை மாணவர்களுக்கு வழங்கினார்.
இக்கருத்தரங்கம் இனிதே நடைபெற துணைநின்ற JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை, இயக்குநர் ஓம் சரவணா, கல்லூரியின் முதல்வர் மற்றும் சிறப்பு விருத்தினருக்கும் முனைவர். சத்யா நன்றியுரை வழங்கினார். இறுதியாக நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.