JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..!

onam festival celebration-JKKN சக்திமயில் நர்சிங் கல்லூரியில் மாணவர்கள் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.;

Update: 2022-09-09 13:30 GMT

ஸ்ரீ சக்தி மயில் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்ற முக்கியஸ்தர்கள்.

onam festival celebration-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ,JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடடப்பட்டது.

கல்லூரி வளாகம் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்து மாணவ, மாணவர்கள் அனைவரும் கேரள மாநில முறைப்படி பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர் மாணவர்கள் பங்கேற்றனர்.


முதலில் இறை வணக்கத்தோடு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. கல்லுரி முதல்வர் டாக்டர். ஜமுனாராணி மற்றும் சிறப்பு விருந்தினர் மற்றும் பேராசிரியர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்தனர் .அதன்பிறகு கல்லுரி முதல்வர் டாக்டர். ஜமுனாராணி ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். அவரை தொடர்ந்து J.K.K .ரங்கம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை நளினி ஓணம் பண்டிகையின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து

விழாவின் ஒரு பகுதியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. திருவாதிரை, ஓணப்பாட்டு, மாவேலி, மலையாளி மாங்கா ஆகியவை நடத்தப்பட்டு இனிப்புகள் வழங்கி விழா இனிதே நிறைவடைந்தது.

Tags:    

Similar News