JKKN கலை அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
JKKN கலை அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டுநலப்பணித்திட்ட 3நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கலை அறிவியல் கல்லூரி நாட்டுநலத் திட்டப்பணிகள் சார்பில் இராசாகோவில், கலியனூரில் 3 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முதல் நாள் :
JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் துவக்க விழா JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை தலைமையில், நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா முன்னிலையிலும் கடந்த 19ம் தேதி சனிக்கிழமை இராசாகோவில், கலியனூரில் நடைபெற்றது.
தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கியா நிகழ்ச்சியில் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் சீரங்கநாயகி வரவேற்புரை ஆற்றினார். சேலம் பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் P.பிரகாஷ் தொடக்க உரை ஆற்றினார்.
JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை தலைமை உரை ஆற்றினார். இவ்விழாவில் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலியனூர் ஊராட்சி பொது மக்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு வழக்கறிஞர் பிரபு நுகர்வோர் என்பவர் யார்? அவர்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன என்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் சட்ட நுணுக்கங்களை எடுத்துரைத்தார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
இரண்டாம் நாள் :
JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு முகாமின், இரண்டாம் நாளான 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 வரை கரைமேடு, கலியனூர் அக்ரஹாரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. மாலை எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.
மூன்றாம் நாள்:
JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு முகாமின் மூன்றாம் நாளான 21ம் தேதி திங்கட்கிழமை அன்று கலியனூர் மற்றும் கலியனூர் அக்ரஹாரம் ஊராட்சியில் காலை 10 மணியளவில் இலவச பல்மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இவ்விரண்டு ஊராட்சிகளில் இருந்து சுமார் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் JKKN பல்மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர் குழுவிடம் பரிசோதனை செய்துகொண்டனர்.
மதியம் 2 மணியவில் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப்பேராசிரியர் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்து பேசினார். நாட்டுநலப்பணித்திட்ட முகாம் இனிதே நிறைவுற்றது.