JKKN கலை அறிவியல் கல்லூரி, பெரியார் பல்கலை., இணைந்து நடத்தும் நாட்டுநலப்பணி சிறப்பு முகாம்..!
குமாரபாளையம்,JKKN கலை அறிவியல் கல்லூரியும் பெரியார் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் நாட்டுநலப்பணி சிறப்பு முகாம் நடந்து வருகிறது.;
நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு முகாமில் கல்லூரி முதல்வருக்கு மரியாதை.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN கலை அறிவியல் கல்லூரி, பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு முகாமை கடந்த 25ம் தேதி சனிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நாட்டு நலப்பணித்திட்டம் இளைஞர்களை தூய்மைப்பணியில் இணைத்து செயல்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டது. அதன்படி தொடக்க நாளான 25ம் தேதி அன்று தட்டான்குட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர். சீரங்கநாயகி வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் பேராசிரியர்கள் சுரேஷ், முத்துவேல் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
களப்பணியாக மாணவர்கள் தட்டான்குட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் கருத்துரை நிகழ்ச்சி முதல்வரின் முன்னிலையில் கோவில் வளாகத்தில் குமராபாளையம் அறிவுத் திருக்கோயில் பேராசிரியர் சுப்புராம் யோகா மற்றும் உடல் நலம் எனும் தலைப்பில் மனிதன் தன் வாழ்வில் உடல் நலனை பாதுகாப்பது பற்றியும் யோகா தெரிந்து கொள்வதால் மனிதனுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பது பற்றியும் சிறப்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் அவசியத்தையும் செயல்முறை விளக்கத்தையும் கூறி மாணவர்களையும் மூச்சு பயிற்சியை செய்ய வைத்தார். இறுதியாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பாலாஜி நன்றி கூறினார். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.