தேசிய அளவிலான உயர்கல்வி மாணவ, மாணவியர் சேர்க்கை -தமிழகம் இரண்டாவது இடம்

கடந்த ஆண்டில் உயர்கல்வி பெண்கள் சேர்க்கை 24.7 சதவிகிதம் குறைந்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-11 05:34 GMT

கடந்த 2019-20 ஆம் கல்வி ஆண்டில் தேசிய அளவிலான உயர்கல்வி மாணவ, மாணவியர் சேர்க்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை உத்தர பிரதேச மாநிலம் பிடித்துள்ளது என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உயர்கல்வி மாணவ, மாணவியர் சேர்க்கை குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டு வரும். இதன் மூலம் எந்த மாநிலத்தில் அதிக மற்றும் குறைந்த அளவு மாணவர்கள் உயர்கல்வியை மேற்கொள்கின்றனர் என்பது தெரியவரும். தற்போது அந்த வகையில் கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி மாணவ, மாணவியர் சேர்க்கை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, தேசிய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையாவது, கடந்த ஆண்டில் உயர்கல்வி பெண்கள் சேர்க்கை 24.7 சதவிகிதம் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இது நிகர் பல்கலையில் 33.4 சதவிகிதம், தனியார் பல்கலையில் 34.7 சதவிகிதம், அரசு பல்கலையில் 61.2 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. மேலும் மாநிலங்களை பொறுத்தவரை தேசிய அளவில் உயர் கல்வி மாணவ, மாணவியர் சேர்க்கையில் உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவ, மாணவியர் ஒட்டுமொத்த சேர்க்கையில் மராட்டிய மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பதையும் சுட்டி காட்டியுள்ளது. அதேபோல் தொழிற்கல்வியில் மாணவியரின் சேர்க்கையும் வெகுவாக குறைந்து வருகிறது என்றும் எம்.பில்., முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்பு தவிர அனைத்து நிலைகளிலும் மாணவர்களின் பங்கு அதிகமாக இருந்து வருகிறது. இவ்வாறு மத்திய கல்வி அமைச்சகம் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News