JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய கைத்தறி தின போட்டிகள்..!
தேசிய கைத்தறி தினத்தையொட்டி குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடைபெறுகிறது.;
national handloom day-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை சார்பாக நாளை (12ம் தேதி) தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கவும், அவர்களுக்கு கைத்தறி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் துறை சார்ந்த மாணவர்களுக்கு கீழ்கண்ட போட்டிகள் நடைபெற உள்ளது.
போட்டிகளின் தலைப்புகள் :
1. Poster presentation
2.Draping
3. Handloom Machine Making
இப்போட்டிகள் காலை 10.30 மணியளவில் தொடங்கி மதியம் 3.00 மணி வரை நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.