JKKN கலை,அறிவியல் கல்லூரியில் தேசிய கைத்தறி தின கொண்டாட்டம்
national handloom day -குமாரபாளையம், JKKN கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கைத்தறி தினக்கொண்டாட்டம் நடைபெற்றது.;
national handloom day-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை சார்பாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்சியில் துகிலியல் துறைத்தலைவர் அன்புசரவணன் வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு அழைப்பாளராக கல்லூரியின் புல முதல்வர் முனைவர் பரமேஸ்வரி மற்றும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் சி. சீரங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கைத்தறி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துகிலியல் துறை மாணவர்களுக்கு Poster Presentation , Draping, Handloom Machinery Making போன்ற போட்டிகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் தொடங்கிய இப்போட்டிகள் மதியம் 3.00 மணி வரை நடைபெற்றது.
இதில் Poster Presentation போட்டியில் முதல் பரிசினை 3ம் ஆண்டு பயிலும் தீபனப்பிரியா, மௌனிகா குழுவினரும், Draping போட்டியில் முதல் பரிசினை 2ம் ஆண்டு பயிலும் சிவரஞ்சனி, புவனேஸ்வரி குழுவினரும், Handloom Machinery Making போட்டியில் முதல் பரிசினை 3ம் ஆண்டு பயிலும் தீபனப்பிரியா, மௌனிகா, ஆர்த்தி குழுவினரும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் சி. சீரங்கநாயகி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.